மமதா உங்களுக்கு எவ்வளவு தைரியம்? அசாம், மணிப்பூர் முதல்வர்கள் கேட்பது ஏன்?

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

மேற்கு வங்க மாநிலத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தினால் அது அண்மை மாநிலங்களிலும் எதிரொலிக்கும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மமதா பானர்ஜி கூறியிருந்த நிலையில், மணிப்பூர் மற்றும் அசாம் முதல்வர்கள் அதற்கு கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

மமதா பானர்ஜி, மாநிலங்களில் வன்முறையை தூண்டும் விதத்திலும் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையிலும் பேசியதற்காக, பகிரங்கமாக மக்கள் முன்னிலையில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் இரு மாநில முதல்வர்களும் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

மேற்கு வங்க தலைநகா் கொல்கத்தாவில் நடைபெற்ற திரிணமூல் காங்கிரஸ் மாணவா் அணி தொடக்க தின பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு மமதா பானர்ஜி பேசினார்.

மமதா் பேசுகையில், பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில், மேற்கு வங்க அரசு சட்டத்திருத்தம் கொண்டு வரும். அந்தச் சட்டத்திருத்தம் மாநில சட்டப்பேரவையில் அடுத்த வாரம் நிறைவேற்றப்படும். இந்தச் சட்டத்திருத்தத்துக்கு மாநில ஆளுநா் ஒப்புதல் அளிக்காவிட்டால் அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்பினால் ஆளுநா் மாளிகை எதிரே நான் தா்னா போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றார்.

பத்லாபூர் சம்பவத்தில் திடீர் திருப்பம்: பள்ளிக்குக் குற்றவாளி வந்துசென்ற சிசிடிவி கிடைத்தது!

மேலும், மேற்கு வங்கத்துக்கு இடையூறு செய்ய வேண்டும் என்று பாஜக முயற்சித்தால், அது அண்டை மாநிலங்களுக்கும் பரவும் என்பதை வலியுறுத்தும் வகையில், நீங்கள் மேற்கு வங்கத்தைக் கொளுத்தினால், அது அசாம், வடகிழக்கு, உத்தரப்பிரதேசம், பிகார், ஜார்க்கண்ட், ஒடிசா மற்றும் தில்லிக்கும் பரவி பற்றி எரியும் என்று எச்சரிக்கும் வகையில் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த அசாம் முதல்வர் ஹிமந்த்வா விஸ்வா சர்மா, சொந்த மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் பிரச்னையை மூடி மறைக்க, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த முயல்கிறார் என்று குற்றம்சாட்டியிருக்கிறார். "மமதா, அசாமுக்கு அச்சுறுத்தல் விடுக்க உங்களுக்கு எவ்வளவு தைரியம்? உங்கள் கோபக் கணல்களை எங்களுக்குக் காட்டாதீர்கள், உங்கள் அரசியல் தோல்விக்கு, இந்தியாவுக்கு நெருப்பு வைக்க முயலாதீர்கள்" என்று சர்மா பதிவிட்டுள்ளார்.

மதுரை எய்ம்ஸ் எப்போது கட்டி முடிக்கப்படும்? மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி!

மணிப்பூர் முதல்வர் பிரென் சிங் கூறுகையில், வடகிழக்கு மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுக்க உங்களுக்கு எவ்வளவு தைரியம் மமதா? பொறுப்பற்ற முறையில் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பதற்கு எனது கண்டனத்தைப் பதிவு செய்கிறேன், பொதுமக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதுபோல, மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் மற்றும் மத்திய அமைச்சருமான சுகந்த மஜும்தார், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, மமதா பானர்ஜியின் பேச்சைக் கண்டித்து கடிதம் எழுதியிருக்கிறார்.

முன்னதாக, பெண் மருத்துவா் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்வா் மம்தா பானா்ஜி ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது.

நேற்று கூட்டத்தில் இதற்கு பதிலளித்து பேசிய மமதா, ‘இந்த விவகாரத்தில் நான் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்துகிறது. உத்தர பிரதேசம், அஸ்ஸாம், மத்திய பிரதேசம் மற்றும் மணிப்பூரில் பாலியல் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறின. அந்த அட்டூழியங்களைத் தடுக்க தவறியதற்கு பிரதமா் மோடி ஏன் ராஜிநாமா செய்யவில்லை என்று பாஜக பதிலளிக்க வேண்டும்’ என்று கூறினாா்.

You may also like

© RajTamil Network – 2024