ஹால்டியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே சரக்கு போக்குவரத்து தொடக்கம்!

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

கொல்கத்தா: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஜெபல் அலி துறைமுகத்துடன் ஹால்டியா டாக் காம்ப்ளக்ஸை இணைக்கும் புதிய கொள்கலன் கப்பல் சேவையை பெங்கால் மிடில் ஈஸ்ட் எக்ஸ்பிரஸ் தொடங்கியதாக சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம் இன்று அறிவித்ததுள்ளது.

பெங்கால் மிடில் ஈஸ்ட் எக்ஸ்பிரஸ் சேவையானது ஹால்டியா-சிட்டகாங்-ஜெபல் அலி-ஹால்டியா வழித்தடத்தில் வங்காளத்தையும், கிழக்கு இந்திய தொழில்துறை மையத்தையும் இணைக்கும் விதமாக அமையும்.

இந்த சேவை டிரான்ஸ்ஷிப்மெண்ட் துறைமுகங்களைத் தவிர்ப்பதன் மூலம் ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கான போக்குவரத்து நேரத்தையும், செலவையும் இது குறைக்க வல்லது.

தாமதங்களைக் குறைப்பதும், செயல்பாட்டு செலவுகளைக் குறைப்பதும், நெரிசலைத் தவிர்ப்பதன் மூலம் பெங்கால் மிடில் ஈஸ்ட் எக்ஸ்பிரஸ் பாதையின் விநியோகச் சங்கிலி செயல்திறன், நம்பகத்தன்மை மற்றும் போட்டித்தன்மையை வெளிப்படுத்துகிறது.

எம்பிகே லாஜிஸ்டிக்ஸுடன் இணைந்து சிங்கப்பூரின் ஓஷன் சல்யூட் லைன் தொடங்கிய பெங்கால் மிடில் ஈஸ்ட் எக்ஸ்பிரஸ் சேவை துறைமுகத்திற்கான உலகளாவிய இணைப்பை இது மேம்படுத்தும். அதே வேளையில் தொடக்கக் கப்பல், யோங் யூ 11, செப்டம்பர் 6 ஆம் தேதி ஹால்டியா டாக் காம்ப்ளக்ஸை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துறைமுகத் தலைவர் ரதேந்திர ராமன் இது குறித்து தெரிவித்ததாவது:

பெங்கால் மத்திய கிழக்கு எக்ஸ்பிரஸ் சேவையை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இது ஹால்டியா மற்றும் ஜெபல் அலி இடையே நேரடி தொடர்பை நிறுவுவது மட்டுமல்லாமல், பிராந்தியத்தில் வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான புதிய வழிகளை திறக்கவுள்ளது.

இந்த முயற்சியை ஆதரிப்பதற்காக, தென்கிழக்கு ஆசியா, தூர கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு துறைமுகங்களிலிருந்து நேரடியாக வரும் கொள்கலன் கப்பல்களுக்கான கட்டணங்களில் கணிசமான தள்ளுபடிகளை வழங்கியுள்ளோம்.

இந்த சேவை உலக அரங்கில் எங்கள் துறைமுகத்தின் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும் பிராந்தியத்தின் எக்ஸிம் வர்த்தகத்தை ஆதரிப்பதற்கும் எங்கள் உறுதிப்பாட்டிற்கும் இதுவே ஒரு சான்றாகும்.

You may also like

© RajTamil Network – 2024