உ.பி.யில் 11வது வந்தே பாரத் ரயில்: ஆக.31ல் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset

உத்தரப் பிரதேசத்தில் 11வது வந்தே பாரத் ரயிலை ஆகஸ்ட் 31ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

மீரட்-லக்னௌவை இணைக்கும் வந்தே பாரத் அதிவிரைவு ரயிலை சனிக்கிழமை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ரயில் மீரட் நகரிலிருந்து காலை 6.35 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1.45 மணியளவில் லக்னௌவை சென்றடையும். மொராதாபாத் மற்றும் பரேலி சந்திப்புகளில் ஐந்து நிமிடங்கள் நின்றுச் செல்லும்.

புதிய பயணம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார் ராகுல்!

பாட்னா-கோமதிநகர், வாரணாசி-தில்லி, வாரணாசி-ராஞ்சி, லக்னௌ, டேராடூன், ஆனந்த் விஹார்-அயோத்தி, ஆனந்த் விஹார்-டேராடூன், கோரக்பூர்-பிரயாக்ராஜ் மற்றும் ஹஸ்ரத் நிஜாமுதீன்-ஹபீப்கஞ்ச் ஆகிய பத்து வந்தே பாரத் ரயில்கள் உ.பி.யில் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே உத்தரப் பிரதேசத்தில் ரயில்களின் எண்ணிக்கை 11 ஆக உயர உள்ளது.

பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் மெத்தனம் காட்டும் மோடி அரசு: கார்கே காட்டம்!

மீரட்-லக்னௌ தவிர சென்னை-நாகர்கோவில் மற்றும் பெங்களூரு-மதுரை வந்தே பாரத் விரைவு ரயில்களையும் பிரதமர் மோடி தில்லியில் இருந்தவாறு இந்த 2 ரயில்களையும் காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைக்க உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

You may also like

© RajTamil Network – 2024