குபேரா: நாகர்ஜுனா போஸ்டர்!

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

குபேரா படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த ராயன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ஆனால், வசூலில் வெற்றி பெறும் என்றே தெரிகிறது.

அதேநேரம், தனுஷின் – 51வது படத்தை சேகர் கமூலா இயக்கி வருகிறார். இதில் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்திலும் நாயகியாக ராஷ்மிகாவும் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

பான் இந்தியப் படமாக உருவாகும் இப்படத்திற்குக் குபேரா என பெயரிடப்பட்டுள்ளது.

தொடரும் அஜித் – யோகி பாபு சர்ச்சை…!

இதன் படப்பிடிப்பு திருப்பதி, தாய்லாந்து, மும்பை பகுதிகளில் நடைபெற்று முடிந்தது. தற்போது, ஹைதராபாத்தில், தனுஷின் சண்டைக்காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில், படப்பிடிப்பு நிறைவடையும் எனத் தெரிகிறது.

இந்த நிலையில், நடிகர் நாகர்ஜுனா பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டரை படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.

You may also like

© RajTamil Network – 2024