Friday, September 20, 2024

234 கி.மீ. வேகத்தில் ஆடி காரில் பறந்த நடிகர் அஜித்… வைரலாகும் வீடியோ

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

அஜித்குமார் புதிதாக வாங்கியுள்ள ஆடி காரில் மணிக்கு 234 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தினை எட்டிவிட்டது. குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகின்றது.

பைக் மற்றும் கார் ரேஸில் அதிக ஆர்வம் உடையவர் நடிகர் அஜித்குமார். இதனாலே படப்பிடிப்பு நேரம் தவிர பிற நேரங்களில் கார் ரேஸ்களுக்கு பயிற்சி செய்வது, கார் ரேஸிற்காக தயாரிக்கப்பட்ட கார்களை ஓட்டிப்பார்ப்பது என பல விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கூட விடாமுயற்சி படத்தில் நடிப்பதற்கு அஜர்பைஜான் செல்வதற்கு முன்னர் ஐக்கிய அமீரகத்திற்குச் சென்று, கார் ரேஸில் கலந்து கொள்ளும் கார் ரேஸ் பந்தையக்காரர்களுடன் கார் ஓட்டினார். இது தொடர்பான வீடியோக்களும் வெளியானது.

இந்நிலையில், அஜித்குமார் தான் புதிதாக வாங்கியுள்ள ஆடி காரில் மணிக்கு 234 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கின்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. மேலும் அந்த வீடியோவில் அஜித்குமாரே வீடியோவில் கார் செல்லும் வேகத்தை பார்க்க சொல்கின்றார். மேலும் ஒரே கையில் காரின் ஸ்டேரிங்கை பிடித்து தைரியமாகவும் அசால்ட்டாகவும் ஓட்டுகின்றார்.

அதிவேகத்தில் அஜித் குமார்234 கிலோ மீட்டர் வேகத்தில் ஆடி காரில் பறந்த நடிகர் அஜித்குமார்#Ajithkumar#Audicar#Carride#VidaaMuyarchi#ThanthiTVpic.twitter.com/BOHf9FRqcv

— Thanthi TV (@ThanthiTV) August 28, 2024

இந்த வீடியோ அஜித்குமார் விடாமுயற்சி படத்திற்காக அஜர்பைஜான் சென்றபோதுதான் எடுக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

Original Article

You may also like

© RajTamil Network – 2024