Friday, September 20, 2024

ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட 4 பிணைக் கைதிகளை மீட்டது இஸ்ரேல்

by rajtamil
0 comment 33 views
A+A-
Reset

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் எட்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது.

ஜெருசலேம்,

கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். மேலும், 250 பேரை பிணைக் கைதிகளாகப் பிடித்து சென்றனர். இதையடுத்து ஹமாஸ் அமைப்பினரை ஒழித்து கட்டுவோம் எனக் கூறி காசா மீது இஸ்ரேல் தாக்குதலை முன்னெடுத்தது.

பலரையும் பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர். இப்படி பிணைக்கைதிகளாக பிடிபட்டவர்களை மீட்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. பிணைக் கைதிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். இன்னமும் 130 பிணைக் கைதிகள் மீட்கப்பட வேண்டும் என்றும், அதில் கால்வாசி பேர் இறந்திருக்கலாம் என்றும், மற்றவர்களை பத்திரமாக மீட்டு நாட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டவர்களில் நான்கு பேரை இஸ்ரேல் மீட்டுள்ளது.நோவா அர்கமாணி (25), அல்மோக் (21), ஆன்ட்ரே கோஸ்லோவ் (27), ஷ்லோமி (40) ஆகிய நான்கு பேரும், சிறப்பு அதிரடி நடவடிக்கையின்போது மீட்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. ஜெய்ரத் அருகே இருவேறு இடங்களிலிருந்த நான்கு பேரும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024