இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம்: அமைச்சர் பொன்முடி

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் வலையாம்பட்டியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று திறந்துவைத்தார்.

இதனிடையே, மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கை 2020-இன் கீழ் உள்ள ’பி.எம். ஸ்ரீ’ திட்டத்தில் தமிழகம் கையெழுத்திட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று கடிதம் எழுதியிருந்த நிலையில், இதற்கு பதிலளித்து அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுடன் பேசியதாவது:

பி.எம். ஸ்ரீ திட்டத்தில் தமிழகம் கையெழுத்திட வேண்டும்: முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் கடிதம்

எந்த கல்விக் கொள்கையைத் திணித்தாலும், அதனை ஏற்க நாங்கள் தயாராக இல்லை, இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். தமிழகத்தின் கல்விக் கொள்கையில் மத்திய அரசின் திட்டங்களை இணைந்து இருக்கிறோம்.

உயர்கல்வியாக இருந்தாலும் இரண்டு மொழி கட்டாயம். தமிழ் மொழியைக் கொண்டு வந்ததால்தான், இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழகம் மிகச்சிறந்த நிலையில் உள்ளது என்று தெரிவித்தார்.

You may also like

© RajTamil Network – 2024