கடந்தாண்டைவிட நடப்பாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவு!

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset

கடந்த நிதியாண்டைவிட நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி குறைந்துள்ளதாக தேசிய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

நடப்பு நிதியாண்டில் ஏப்ரல்-ஜூன் மாதங்களில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.7 சதவிகிதமாக குறைந்துள்ளது. இது கடந்த நிதியாண்டில் 8.2 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக விவசாயத் துறையின் மோசமான செயல்திறன் காரணமாகதான் குறைந்துள்ளதாக தரவு தெரிவிக்கிறது.

தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது, 2023 – 24 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டில் 3.7 சதவிகிதமாக இருந்த விவசாயத் துறை வளர்ச்சி தற்போது 2 சதவிகிதமாக பதிவாகியுள்ளது.

எனினும், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் உற்பத்தித் துறையின் வளர்ச்சி 5 சதவிகிதத்துடன் ஒப்பிடும்போது 7 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

காங்கிரஸ் எங்கு சென்றாலும் துயரம்தான் வருகிறது: பாஜக காட்டம்!

நிதி, ரியல் எஸ்டேட், தொழில்முறை சேவைகளின் சேர்க்கப்பட்ட மொத்த மதிப்பின் விரிவாக்கம் கடந்த நிதியாண்டின் காலாண்டில் 12.6 சதவிகிதத்திலிருந்து 7.1 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

2024 – 25 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நிலையான விலையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 43.64 லட்சம் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது; இது 2023 – 24 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 40.91 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

இதன்மூலம், 6.7 சதவிகித வளர்ச்சி விகிதத்தைக் காட்டுகிறது.

மின்சாரம், எரிவாயு, குடிநீர் வழங்கல், பிற பயன்பாட்டு சேவைகள் 3.2 சதவிகிதத்திலிருந்து 10.4 சதவிகிதம் உயர்ந்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு 8.6 சதவிகிதமாக இருந்த கட்டுமானப் பிரிவு, தற்போது 10.5 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளது.

வர்த்தகம், ஹோட்டல்கள், போக்குவரத்து, தகவல் தொடர்பு, ஒளிபரப்பு தொடர்பான சேவைகள் ஒரு வருடத்திற்கு முன்பாக 9.7 சதவிகிதமாக இருந்த நிலையில், தற்போது 5.7 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

மும்பையில் உள்ள கோடக் மஹிந்திரா வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் உபாஸ்னா பரத்வாஜ் கூறுவதாவது, "2025 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட குறைவாக இருந்தாலும், மொத்த மதிப்புக் கூட்டல் உறுதியாகத்தான் உள்ளது.

விவசாயம் அல்லாத வளர்ச்சி நன்றாக உள்ளது. நகர்ப்புற தேவை, தனியார் மூலதனம், உலகளாவிய மந்தநிலையின் வேகமும் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்தார்.

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சிக்கிய 4 வழக்கறிஞர்களுக்கு தடை விதிப்பு

You may also like

© RajTamil Network – 2024