Friday, September 20, 2024

டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி

by rajtamil
0 comment 32 views
A+A-
Reset

டி20 உலகக்கோப்பை தொடரில் நெதர்லாந்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபரா வெற்றிபெற்றது.

நியூயார்க்,

டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் டி பிரிவில் இன்று நடந்த 16வது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து – தென் ஆப்பிரிக்கா மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய நெதர்லாந்து 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் இங்கல்பிரிசெட் அதிகபட்சமாக 40 ரன்கள் சேர்த்தார்.

சிறப்பாக பந்து வீசிய தென் ஆப்பிரிக்க அணியின் பிரீட்மென் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதையடுத்து, 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் குவிண்டன் டிகாக் ஆட்டத்தின் முதல் பந்திலேயே (0 ரன்கள்) ரன் அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரரான ஹெண்ட்ரிக்ஸ் 3 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் மார்க்ரம் 3 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் (0 ரன்) கேட்ச் மூலம் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய கிளாசன் 4 ரன்னில் அவுட் ஆனார். தென் ஆப்பிரிக்கா 4.3 ஓவரில் 12 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து, ஸ்டப்ஸ் உடன் ஜோடி சேர்ந்த டேவிட் மில்லர் அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஸ்டப்ஸ் 33 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் தென் ஆப்பிரிக்கா 18.5 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் நெதர்லாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றிபெற்றது. தென் ஆப்பிரிகாவின் மில்லர் 59 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார்.

You may also like

© RajTamil Network – 2024