கமுகறை பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது

by rajtamil
0 comment 35 views
A+A-
Reset

13-ந் தேதி அலங்கார தீபாராதனை, புஷ்பாபிஷேகம் போன்றவை நடக்கிறது.

தக்கலை,

தக்கலை அருகே உள்ள கூட்டமாவு, கமுகறை பகுதியில் 800 ஆண்டுகள் பழைமையான பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 7-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று காட்டாத்துறை ஆல்தரை அம்மன் கோவிலில் இருந்து கும்ப நீர் எடுத்து வரப்பட்டது. கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி காலை 6.30 மணிக்கு கோவில் தந்திரி கமுகறை சதீஷ் போற்றி தலைமையில் கணபதி ஹோமம், கோமாதா பூஜை, நவசக்தி பூஜை, அஷ்டபந்தனம் சார்த்துதல் போன்றவை நடைபெற்றது. தொடர்ந்து காலை 11 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறும். இரவில் தீபாராதனை, அன்னதானம், பஜனை, சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

நாளை (திங்கட்கிழமை) காலையில் சுமங்கலி பூஜை, மதியம் உச்ச கால பூஜை, மாலையில் திருவிளக்கு பூஜையும், 11-ந் தேதி மாலை 3 மணிக்கு ராகுகால துர்க்கா பூஜை, இரவில் கலை நிகழ்ச்சிகளும், 12-ந் தேதி காலையில் சமய வகுப்பு மாணவ-மாணவிகளில் விளையாட்டு மற்றும் பண்பாட்டு போட்டிகளும் நடைபெறுகிறது. 13-ந் தேதி அலங்கார தீபாராதனை, புஷ்பாபிஷேகம் போன்றவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இந்து அறநிலைய துறை அதிகாரிகளின் வழிகாட்டுதலில் கமுகறை ஹைந்தவ முன்னேற்ற சங்க தலைவர் சிவகுமார், துணைத் தலைவர் சதீஷ் போற்றி, செயலாளர் முருகேசன், துணைச் செயலாளர் அனீஷ், பொருளாளர் விஜயகுமாரி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், பக்தர்கள் செய்துள்ளனர்.

You may also like

© RajTamil Network – 2024