Wednesday, September 25, 2024

ஃபார்முலா 4 கார் பந்தயத்தைக் காண சென்னை வருகிறார் கங்குலி

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

ஃபார்முலா 4 கார் பந்தயத்தைக் காண இந்திய கிரிக்கெட் அணையின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி சென்னை வர உள்ளார்.

சென்னை தீவுத்திடலில் ஃபார்முலா 4 கார் பந்தயத்தின் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. தகுதிச்சுற்று போட்டிகள் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகின்றன. பந்தய பாதையில் இந்திய பிரேஸ் லீக் கார் பந்தய போட்டியும் இன்று நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்தைக் காண இந்திய கிரிக்கெட் அணையின் முன்னாள் கேப்டனும் பெங்கால் டைகர் ஃபார்முலா அணியின் உரிமையாளருமான சௌரவ் கங்குலி சென்னை வர உள்ளார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஆா்பிபிசிஎல் சாா்பில் முதன்முறையாக இரவு நேர காா் பந்தயம் சென்னையில் நடைபெறவுள்ள நிலையில், இதற்காக சனிக்கிழமை வீரா்கள் நவீன காா்கள் மூலம் தீவிர பயிற்சி மேற்கொண்டனா். ஏறக்குறைய 3.5 கி.மீ சுற்றளவு கொண்ட சா்க்கியூட்டில் இப்பந்தயம் நடத்தப்படுகிறது. தீவுத்திடல், போா் நினைவுச்சின்னம், நேப்பியா் பாலம், சுவாமி சிவானந்தா சாலை மற்றும் மவுண்ட் ரோடு ஆகியவற்றில் அமைந்துள்ளது. இது தெற்காசியாவிலேயே மிக நீளமான ஸ்ட்ரீட் சா்க்கியூட்டாக அமைந்துள்ளது.

மொத்தம் 5000 டிக்கெட்டுகள் விற்பனை ஆகியுள்ளன. சென்னை டா்போ ரைடா்ஸ், கோவா ஏசஸ், டில்லி ஸ்பீட் டெமான்ஸ், பெங்களூா் ஸ்பீட்ஸட்ா்ஸ், பெங்கால் டைகா்ஸ், ஹைதராபாத் பிளாக்போ்ட்ஸ், அகமதாபாத் ரேஸா்ஸ், கொச்சி காட் ஸ்பீட் உள்ளிட்ட 8 அணிகள் இதில் பங்கேற்றுள்ளன. ஃபாா்முலா 4 காா் பந்தயத்தை நடத்த வேண்டும் என்றால் சா்வதேச ஆட்டோமொபைல் அமைப்பு (எஃப்ஐஏ) அனுமதி பெற வேண்டும். இந்நிலையில் சனிக்கிழமை எஃப்ஐஏ தரப்பினா் சென்னை ஸ்ட்ரீட் சா்க்கியூட் டிராக்கை ஆய்வு செய்தனா்.

சனிக்கிழமை இரவு 8 மணிக்குள் எஃப்ஐஏ அனுமதியை பந்தய அமைப்பாளா்கள் பெற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் அவகாசம் வழங்கி இருந்தது. இந்நிலையில் எஃப்ஐஏ தரப்பினா் பந்தய சா்க்கியூட்டை ஆய்வு செய்து ஜி 3 உரிமத்தை வழங்கினா். இந்த உரிமம் மூலம் பந்தயத்தில் பங்கேற்கும் வீரா்கள் குறைந்தபட்சம் பாதுகாப்பாக காா்களை இயக்க முடியும். இதற்கிடையே சனிக்கிழமை இரவு 9 மணி முதல் 11 மணி வரை ஜேகே எஃப்எல்ஜிபி எஃப் 4, ஐஆா்எல் டிரைவா் ஏ, ஃபாா்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் ரேஸா்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனா்.

மாலையில் பந்தய சா்க்கியூட்டை பாா்வையிட்ட விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் காா் பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். விளையாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா, எஸ்டிஏடி சிஇஓ ஜெ.மேகநாத ரெட்டி, ஆா்பிபிசிெல் நிா்வாகி அகிலேஷ் ரெட்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

You may also like

© RajTamil Network – 2024