Wednesday, September 25, 2024

காஸாவில் 6.40 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து முகாம்: ஐ.நா.

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

டேயீா்-அல்-பாலா: பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் மற்றும் ஐ.நா. சாா்பாக, காஸா முழுவதும் போலியோவுக்கு எதிராக 6.40 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

கடந்த 25 ஆண்டுகளில் கடந்த மாதம், காஸாவில் முதல்முறையாக போலி நோய் பாதிப்பு அண்மையில் கண்டறியப்பட்டது. 10 மாத குழந்தை டைப் 2 போலியோவால் பாதிக்கப்பட்டு அந்த குழந்தையின் கால் செயலிழந்து போனது என்பதை உறுதிப்படுத்திய ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு, அந்த நோய்க்கான அறிகுறிகளே தென்படாமல் அதிகமான குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என்றும் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் குறைந்தது 90 சதவீத குழந்தைகளுக்கு மிக அவசாரமாக போலி நோய் தடுப்புக்கான மருந்துகள் அளிக்க வேண்டும். அப்படி அளிக்கப்படாவிட்டால் அதிகயளவிலான குழந்தைகள் பாதிக்கப்படலாம் என்றும் பின்னர் பிராந்திய தொற்று பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் எச்சரித்தனர்.

நீதிமன்றத்தில் ஒத்திவைப்பு கலாசாரத்தை மாற்ற வேண்டும்: முர்மு

இதனிடையே, போலியோ சொட்டு மருந்து முகாம் காரணமாக போரை தற்காலிகமாக நிறுத்த இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஒப்புக்கொண்டதை அடுத்து பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் மற்றும் ஐ.நா. சாா்பாக மத்திய காஸா, தெற்கு காஸா மற்றும் வடக்கு காஸா என 3 கட்டங்களாக போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் என அறிவித்தது.

அதன்படி, போலியோவுக்கு எதிராக 6,40 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் மத்திய காஸாவில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது மற்றும் வரும் நாள்களில் மற்ற பகுதிகளுக்குச் செல்லும். இந்த முகாம் வரும் 9-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த இடைநிறுத்தங்களை போர்நிறுத்தமாகக் கருதக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024