Wednesday, September 25, 2024

கனமழை: ஹைதராபாத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் செப். 2 விடுமுறை

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset

ஹைதராபாத் (தெலங்கானா): கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஹைதராபாத்தில் உள்ள அனைத்து ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கும் திங்கள்கிழமை (செப். 2) விடுமுறை அறிவித்து ஹைதராபாத் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தெலங்கானாவில் பல்வேறு பகுதிகளிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. நாராயண்பேட்டையில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில், மகபூபாபாத்தில் பெரும்பாலான இடங்களிலும், வாரங்கலில் ஒரு சில இடங்களிலும், பி. தெலங்கானாவின் கொத்தகுடெம், கம்மம், மகபூப்நகர், முலுகு, நாகர்கர்னூல், சூர்யாபேட் மற்றும் வனபர்த்தி மாவட்டங்களில் மிக கனமழை பெய்துள்ளது என்றும், கிருஷ்ணா, குண்டூர் மாவட்டங்களில் பெய்த மழைக்கு வீடுகள் இடிந்து 4 பேர் பலியாகினர். மழை வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்டு சிலர் மாயமானதாகவும், மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர். வெள்ளத்தால் மகபூபாபாத்-கேசமுத்ரம் இடையேயான ரயில் தண்டவாளம் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீரால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் மகபூபாபாத்-கேசமுத்ரம் இடையேயான ரயில் தண்டவாளம் நீரில் அடித்துச் செல்லப்பட்டது.

நாளை(செப். 2)விடுமுறை

இந்த நிலையில், கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஹைதராபாத்தில் உள்ள அனைத்து ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கும் திங்கள்கிழமை (செப். 2) விடுமுறை அறிவித்து ஹைதராபாத் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

"ஹைதராபாத் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்ற முன்னறிவிப்பின் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்டத்தில் உள்ள அரசு, உதவிபெறும் மற்றும் தனியார் அனைத்து தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு, திங்கள்கிழமை(செப்.2) விடுமுறை அறிவிக்கப்படுகிறது." மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக ஹைதராபாத் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

வயநாட்டில் சுற்றுலாத்துறையை மீட்டெடுக்க வேண்டும்: ராகுல் காந்தி வயநாட்டில் சுற்றுலாத்துறையை மீட்டெடுக்க வேண்டும்: ராகுல் காந்தி

துணை முதல்வர் நேரில் ஆய்வு

இதற்கிடையில், துணை முதல்வர் பாட்டி விக்ரமார்க்க மல்லு தனது தொகுதியான கம்மத்தில், வெள்ளம் பாதித்த பகுதிகள் மற்றும் நிவாரண முகாம்களை ஞாயிற்றுக்கிழமை நேரில் பார்வையிட்டார். குறிப்பாக வாகவேடு கிராமம், மத்திரா மண்டல் ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டவர், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஹைதராபாத்தில் உள்ள ஹுசைன் சாகர் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

முன்னதாக, அனைத்து அரசுத் துறை அதிகாரிகளும் உஷார் நிலையில் இருக்குமாறு முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவுறுத்தியுள்ளார்.

தெலங்கானாவில் அனைத்து மாவட்டங்களிலும் அடுத்த மூன்று நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று ஹைதராபாத் வானிலை ஆய்வு மைய இயக்குநர் கே.நாகரத்தினம் கூறியுள்ளார்.

மேலும் தெலங்கானாவில் ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் வடகிழக்கு மாவட்டங்களிலும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024