Wednesday, September 25, 2024

தில்லி போக்குவரத்துத் துறை ஊழியர்களுடன் ராகுல்! விடியோ

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், தில்லி போக்குவரத்துத் துறை ஊழியர்களுடன் தான் கலந்துரையாடிய விடியோவை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு, லட்சக்கணக்கான மக்களின் பயணம் இனிமையாக இருக்கக் காரணமான ஊழியர்களுக்கு நியாயம் கிடைப்பதில்லை என்று தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம், தில்லி போக்குவரத்துத் துறை ஊழியர்களுடன் கலந்துரையாடிய விடியோவை, தற்போது தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ராகுல், தாங்கள் நாட்டின் நிரந்தர குடிமக்களாக இருக்கிறோம், ஆனால் ஏன் நிரந்தர பணி கொடுக்கப்படாமல் தற்காலிக ஊழியர்களாகவே வைக்கப்பட்டுள்றோம் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ஒரு சில நாள்களுக்கு முன்பு, தில்லியில், பேருந்தில் பயணித்த ஒரு சிறந்த அனுபவம் எனக்குக் கிடைத்தது மற்றும் தில்லி போக்குவரத்துத் துறை ஊழியர்களுடன் உரையாடியபோது, அவர்களின் அன்றாட பணிச்சூழல் மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் பற்றிய தகவல்களையும் கேட்டறிந்தேன்.

இதிலும் முறைகேடா? டாப் ரேங்க் எடுத்த காவல்துறை பயிற்சி எஸ்ஐ! மறுதேர்வில்..

தங்களுக்கு சமூகப் பாதுகாப்பு இல்லை, நிலையான வருமானம் இல்லை மற்றும் நிரந்தர வேலையும் இல்லை என்று மிகப்பெரிய பொறுப்பை ஏற்றிருக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் கூறுகிறார்கள்.

நிலையற்ற வாழ்க்கையால், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் நிச்சயமற்ற இருளில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் நிலையில், பயணிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட ஊர்க்காவல் படையினர் தொடர்ச்சியாக கடந்த 6 மாதங்களாக சம்பளம் இல்லாமல் உள்ளதையும் தெரிவித்திருக்கிறார்கள்.

இதிலும் முறைகேடா? டாப் ரேங்க் எடுத்த காவல்துறை பயிற்சி எஸ்ஐ! மறுதேர்வில்..

நாட்டையே இயக்குகிறார்கள்.. ஆனால்?

இதுபோன்ற புறக்கணிப்புகளால் பாதிக்கப்பட்டு, நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்களைப் போலவே, தில்லி போக்குவரத்து ஊழியர்களுக்கும் தனியார்மயமாக்கல் எனும் அச்சம் சூழ்ந்துகொண்டுள்ளது.

இதுபோன்ற மக்கள்தான் நாட்டையே இயக்குகிறார்கள், ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்களின் பயணத்தை எளிதாக்குகிறார்கள் – ஆனால் அவர்களின் அர்ப்பணிப்புப் பணிக்கு ஈடாக அவர்களுக்கு கிடைப்பதோ அநீதிதான் என்கிறார்கள் அதிருப்தியுடன்.

कुछ दिनों पहले दिल्ली में एक सुखद बस यात्रा के अनुभव के साथ DTC कर्मचारियों से संवाद कर उनके दिनचर्या और समस्याओं की जानकारी ली।
न सामाजिक सुरक्षा, न स्थिर आय और न की स्थाई नौकरी – Contractual मजदूरी ने एक बड़ी ज़िम्मेदारी के काम को मजबूरी के मुकाम पर पहुंचा दिया है।
जहां… pic.twitter.com/X4qFXcUKKI

— Rahul Gandhi (@RahulGandhi) September 2, 2024

அவர்களது கோரிக்கையாக ஒருமித்த குரலில் கேட்பது என்னவோ, சம வேலை, சம ஊதியம், அனைவருக்கும் நீதி என்பதே.

தொடர்ந்து அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியால் கனத்த இதயத்துடனும் சோகத்துடனும் மத்திய அரசிடம் கேட்பது, "நாங்கள் இந்த நாட்டின் நிரந்தர குடிமக்கள் என்றால், எங்கள் வேலைகள் மட்டும் ஏன் தற்காலிகமானதாக இருக்கின்றன?"

ராகுல் பகிர்ந்த விடியோவில், உபர் கார் ஒன்றில் ராகுல் வந்து இறங்குகிறார், சரோஜினி நகர் பேருந்து பணிமனை அருகே ராகுல், பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களிடம் கடந்த புதன்கிழமை கலந்துரையாடிய விடியோ வெளியாகியிருக்கிறது.

You may also like

© RajTamil Network – 2024