Wednesday, September 25, 2024

செப்டம்பர் மாத பலன்கள்!

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

Table of Contents

தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் செப்டம்பர் மாத பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு – தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் – பஞசம ஸ்தானத்தில் சூரியன், புதன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன், கேது – லாப ஸ்தானத்தில் சனி (வ) – அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என வலம் வருகிறார்கள்

கிரகமாற்றங்கள்:

17ம் தேதி பஞ்சம ஸ்தானத்தில் இருந்து சூரியன் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

19ம் தேதி பஞ்சம ஸ்தானத்தில் இருந்து புதன் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

19ம் தேதி ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

எத்தனை துன்பங்கள் வந்தாலும் அதனை மனதுக்குள் மறைத்து வெளியில் மகிழ்ச்சியை காண்பிக்கும் திறனுடைய மேஷ ராசி அன்பர்களே இந்த மாதம் ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரம் பல வகையிலும் நற்பலன்களை அள்ளித் தரும். தெய்வபக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும். அஷ்டம ஸ்தானத்தில் இருக்கும் எதிலும் கவனமாக பேசுவது நல்லது. வீண் பழி உண்டாகலாம்.

குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படியான நிலை உருவாகலாம். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளின் கல்வியில் கவனம் தேவை. கெட்டகனவுகள் தோன்றும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களை விட்டு விலகி செல்லலாம். மனதில் நிலையான எண்ணம் இருக்காது. பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். ஆர்டர்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் தேவை. பணவரத்து தாமதப்படலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். எச்சரிக்கையாக பேசுவது நல்லது.

கலைத்துறையினருக்கு மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.

அரசியலில் இருப்பவர்களுக்கு இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். இருப்பினும் நற்பெயர் கிடைக்கும்.

மாணவர்களுக்கு கல்விக்காக செலவு உண்டாகும். கல்வியில் வெற்றி பெறு வோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும்.

உடல்நிலையைப் பொறுத்தவரை மருத்துவ செலவு உண்டாகலாம். வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்.

அசுபதி:

இந்த மாதம் எல்லோரையும் வசீகரிக்கும் பேச்சை வளர்த்துக் கொள்வீர்கள். ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தால் எல்லா காரியங்களும் அனுகூலமாகும். முக்கிய நபர்களின் சந்திப்பும் அவர்களால் உதவியும் கிடைக்கும்.

பரணி:

இந்த மாதம் உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தைரியம் கூடும். சுய நம்பிக்கை உண்டாகும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் எதிர் பாராத திருப்பங்கள் ஏற்படும்.

கார்த்திகை:

இந்த மாதம் லாப ஸ்தானத்தில் இருக்கும் கேதுவின் சஞ்சாரத்தால் தொழில் வியாபாரத்தில் முன்னேற வாய்ப்புகள் எதிரில் வந்து தோன்றும். வியாபாரம் தொடர்பான செலவு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். செயல்திறன் அதிகரிக்கும்.

பரிகாரம்: செவ்வாய்கிழமைதோறூம் விரதம் இருந்து முருகனை வணங்கி வர காரிய தடைகள் நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: செவ்வாய், வியாழன்; தேய்பிறை: செவ்வாய், புதன், வெள்ளி;

சந்திராஷ்டம தினங்கள் : 9, 10, 11

அதிர்ஷ்ட தினங்கள்: 2, 3, 4, 29, 30

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

கிரகநிலை:

ராசியில் குரு – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் – சுக ஸ்தானத்தில் சூரியன், புதன் – பஞசம ஸ்தானத்தில் சுக்கிரன், கேது – தொழில் ஸ்தானத்தில் சனி (வ) – லாப ஸ்தானத்தில் ராகு என வலம் வருகிறார்கள்.

கிரகமாற்றங்கள்:

17ம் தேதி சுக ஸ்தானத்தில் இருந்து சூரியன் பஞசம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

19ம் தேதி சுக ஸ்தானத்தில் இருந்து புதன் பஞசம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

19ம் தேதி பஞசம ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

ரிஷப ராசியினரே இந்த மாதம் ராசிநாதன் சுக்கிரனின் சஞ்சாரத்தால் காரிய தடை ஏற்படலாம். மனதில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டு நீங்கும். ராசியாதிபதி சுக்கிரன் குருவிற்கு திரிகோணம் பெறுவதால் சாமர்த்தியமான பேச்சு கை கொடுக்கும். பணவரத்து திருப்தியாக இருக்கும். நீண்ட நாட்களாக இழுத்து வந்த வீண் பிரச்சனைகள் நீங்கும். மரியாதை அந்தஸ்து உயரும். வெளிநாட்டு பயணங்கள் கைகூடும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் உண்டாகும்.

தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கி நன்கு நடைபெறும். கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவி கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம். கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அலுவலகத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்சனை தலை தூக்கலாம். உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம்.

பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். காரிய தடைகள் நீங்கும். மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும்.

கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்ற மடைய முழு முயற்சியுடன் படிப்பீர்கள். சக மாணவர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.

உடல்நிலையைப் பொறுத்தவரை இருந்து வந்த மருத்துவ செலவுகள் குறையும். மறைவிடங்கள் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். சோம்பல் அதிகமாகலாம்.

கார்த்திகை:

இந்த மாதம் குடும்பாதிபதி புதனின் சஞ்சாரத்தால் குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். பிரிந்து சென்ற குடும்ப உறுப்பினர் மீண்டும் வந்து சேரலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர் மத்தியில் மரியாதை கூடும்.

ரோகினி:

இந்த மாதம் எதிர்பாராத சந்திப்புகள் உண்டாகும். திடீர் செலவு உண்டாகும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். தேவையான பொருள்களை வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக செய்ய நினைத்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூடும். குடும்பத்தினருடன் வீண் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும்.

மிருகசீர்ஷம்:

இந்த மாதம் நண்பர்களிடையே சுமூக உறவு இருக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது. வாழ்வில் முன்னேற அக்கறை காட்டுவீர்கள். மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் நவக்கிரகத்தில் சுக்கிரனுக்கு மொச்சை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். மனமகிழ்ச்சி ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், வியாழன், வெள்ளி; தேய்பிறை: திங்கள், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள் : 12, 13

அதிர்ஷ்ட தினங்கள்: 5, 6

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

கிரகநிலை:

ராசியில் செவ்வாய் – தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், புதன் – சுக ஸ்தானத்தில் சுக்கிரன், கேது – பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) – தொழில் ஸ்தானத்தில் ராகு – அயன சயன போக ஸ்தானத்தில் குரு என வலம் வருகிறார்கள்.

கிரகமாற்றங்கள்:

17ம் தேதி தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சூரியன் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

19ம் தேதி தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து புதன் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

19ம் தேதி சுக ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் பஞசம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

நிதான கலையை அறிந்த மிதுன ராசியினரே இந்த மாதம் ராசிநாதன் புதனின் சஞ்சாரத்தால் தேவையான உதவிகள் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். ராசியாதிபதி புதன் சுக்கிரனுடன் செய்யும் சஞ்சாரம் வீண் அலைச்சலை தரும். உழைப்பு அதிகரிக்கும். பயணங்களால் வீண் செலவு உண்டாகும்.

குடும்பத்தில் அமைதி குறையலாம். நிதானமாக பேசி பழகுவது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம்.

தொழில் வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த நீண்ட நாள் பிரச்சனைகள் ஒரு சுமூக முடிவிற்கு வரும். உங்கள் வியாபாரத்தை விருத்தி செய்து கொள்வீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். மேலிடத்திலிருந்து உங்களுக்கு பொறுப்புகளை அதிகரிக்கலாம். பணி நிமித்தமாக வெளியூர் சென்று தங்க வேண்டி வரலாம்.

பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. சேமிப்புகள் செய்யும் முன் தகுந்த ஆலோசனை பெறவும்.

கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை.

மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். பெற்றோர் சொல்படி கேட்டு நடப்பீர்கள்.

உடல்நலனைப் பொறுத்தவரை செவ்வாய் ஆறாம் இடத்தைப் பார்ப்பதால் ரத்தம் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். நடைப்பயிற்சி செய்வது நன்மையைத் தரும்.

மிருகசீர்ஷம்:

இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். விருப்பமானவர்களை சந்தித்து உரையாடி மகிழ்ச்சி அடைவீர்கள். மனதுணிவு உண்டாகும். எந்த ஒரு காரியத்தையும் துணிவுடன் செய்து அதிக நன்மை அடைவீர்கள். போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.

திருவாதிரை:

இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களிடம் கவனமாக பேசுவது வியாபார விருத்திக்கு உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கோபப்படாமல் மேல் அதிகாரிகள் சொன்ன வேலையை செய்து முடிப்பது நல்லது. சக ஊழியர்கள் பேச்சை கேட்டு நடப்பதை தவிர்ப்பது நன்மை தருவதாக இருக்கும்.

புனர்பூசம்:

இந்த மாதம் கணவன், மனைவி நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன் பேசும்போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.

பரிகாரம்: புதன்கிழமைகளில் பெருமாளை தரிசித்து அர்ச்சனை செய்ய எல்லா நலனும் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: புதன், வெள்ளி; தேய்பிறை: புதன், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள் : 14, 15

அதிர்ஷ்ட தினங்கள்: 7, 8

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், புதன் – தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்கிரன், கேது – அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ) – பாக்கிய ஸ்தானத்தில் ராகு – லாப ஸ்தானத்தில் குரு – அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் என வலம் வருகிறார்கள்.

கிரகமாற்றங்கள்:

17ம் தேதி தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து சூரியன் தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

19ம் தேதி தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து புதன் தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

19ம் தேதி தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

எதையும் எதிர்பார்க்காமல் எடுத்த காரியங்களை செய்யும் குணமுடைய கடக ராசி அன்பர்களே இந்த மாதம் எதிர்ப்புகள் விலகும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பயணம் மூலம் நன்மை கிடைக்கும். செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். காரிய தடைகள் அவ்வப்போது இருந்தாலும் பணவரவு அதிகரிக்கும். புத்தி சாதூரியம் கூடும். அயன சயன ஸ்தானாதிபதி புதன் சுக்கிரனுடன் இணைவதால் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும் உறவு பலப்படும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்க பெறுவீர்கள். அவர்களது கல்வியில் முன்னேற்றம் காணப்படும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். வியாபார நிமித்தமாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையான பேச்சால் வெற்றி பெறுவார்கள். வாகன யோகம் உண்டாகும். எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன் பகை ஏற்படலாம். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும்.

பெண்களுக்கு புத்திசாதூரியம் அதிகரிக்கும் எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம். பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கும். பிள்ளைகளுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை.

மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள்.

உடல்நலனைப் பொறுத்தவரை நீர் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்.

புனர்பூசம்:

இந்த மாதம் நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் சூழ்நிலை உருவாகும். பணவசதி கூடும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். வாழ்க்கையில் இருந்த அதிருப்தி நீங்கி பிடிப்பு உண்டாகும். எதிர்பார்த்த தகவல் வரும். மேலும் இடமாற்றம் உண்டாகலாம். எதிர்பாராத திடீர் செலவு ஏற்படும்.

பூசம்:

இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் திடீர் செலவு ஏற்படும். எதிர்பார்த்த லாபம் குறையலாம். புதிய ஆர்டர்களுக்காக கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.

ஆயில்யம்:

இந்த மாதம் குடும்பத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்சனை தலை தூக்கலாம். உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் கவனமாக பேசுவது நல்லது.

பரிகாரம்: அபிராமி அந்தாதி துதி பாடி அம்மனை வணங்கி வர குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, திங்கள், வியாழன்; தேய்பிறை: ஞாயிறு, திங்கள்

சந்திராஷ்டம தினங்கள் : 16, 17

அதிர்ஷ்ட தினங்கள்: 9, 10, 11

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)

கிரகநிலை:

ராசியில் சூரியன், புதன் – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன், கேது – களத்திர ஸ்தானத்தில் சனி (வ) – அஷ்டம ஸ்தானத்தில் ராகு – தொழில் ஸ்தானத்தில் குரு – லாப ஸ்தானத்தில் செவ்வாய் என வலம் வருகிறார்கள்.

கிரகமாற்றங்கள்:

17ம் தேதி ராசியில் இருந்து சூரியன் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

19ம் தேதி ராசியில் இருந்து புதன் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

19ம் தேதி தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

எதைக் கண்டும் கலங்காமல் எதிர்த்து நிற்கும் இயல்புடைய சிம்ம ராசி அன்பர்களே இந்த மாதம் ராசிநாதன் சூரியன் ராசியில் சஞ்சாரம் செய்வதால் வீண் மனக் கவலை அகலும். எதிர்பாராத செலவு ஏற்படும். முயற்சிகளில் தடையை ஏற்படாதிருக்க திட்டமிடல் அவசியமாகிறது. இடம் விட்டு வெளியில் தங்க நேரிடும். எதிலும் திருப்தி இல்லாத நிலை காணப்படும்.

குடும்பத்தில் கலகலப்பு குறையும். எதிலும் வெறுப்பும் திடீர் கோபமும் வரலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் சொல்வதை கேட்டு நிதானமாக பேசுவது நல்லது. பேச்சின் இனிமை சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடிய உதவும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் போட்டியை சந்திக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களிடம் கடுமையான பேச்சை தவிர்ப்பது நல்லது. லாபம் எதிர்பார்த்ததை விட குறையலாம். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மன உறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும்.

பெண்களுக்கு எந்த முயற்சியிலும் சாதகமான பலன் கிடைப்பதில் தாமதமாகும். மனகவலை ஏற்படலாம்.

கலைத்துறையினருக்கு வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. ராசிக்கு ஒன்பதமிடமான பாக்கியஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் சுக்கிரன் குருவிற்கு கேந்திரம் பெறுவதால் மிக நன்மையான காலகட்டத்தில் இருக்கிறீர்கள். சக கலைஞர்களிடம் அனுசரித்து போவது நன்மைதரும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு வீண் பேச்சை குறைப்பது நல்லது. எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம்.

மாணவர்களுக்கு கல்வியை பற்றிய கவலை உண்டாகும். தடையை தாண்டி முன்னேற முயற்சிப்பீர்கள்.

உடல்நலனைப் பொறுத்தமட்டில் உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம்.

மகம்:

இந்த மாதம் மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும். பணவரத்து கூடும். நண்பர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். மேலிடத்திலிருந்து உங்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும்.

பூரம்:

இந்த மாதம் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருக்கும். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். மனதில் உற்சாகம் ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்கள் சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்வது நல்லது. பொறுப்புகள் அதிகரிக்கும். மனதில் இருந்த பயம் நீங்கி துணிவு உண்டாகும். வீண் வாக்குவாதஙக்ளை தவிர்ப்பது நல்லது.

உத்திரம்:

இந்த மாதம் எடுத்த காரியம் கைகூடும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தரும், கடன் விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும்.

பரிகாரம்: அருகில் இருக்கும் சிவன் ஆலயத்திற்கு சென்று வணங்கி அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். மனோ பலம் கூடும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, செவ்வாய்; தேய்பிறை: ஞாயிறு, வியாழன்

சந்திராஷ்டம தினங்கள் : 18, 19

அதிர்ஷ்ட தினங்கள்: 12, 13

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

கிரகநிலை:

ராசியில் சுக்கிரன், கேது – ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) – களத்திர ஸ்தானத்தில் ராகு – பாக்கிய ஸ்தானத்தில் குரு – தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் – அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன், புதன் என வலம் வருகிறார்கள்.

கிரகமாற்றங்கள்:

17ம் தேதி அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து சூரியன் ராசிக்கு மாறுகிறார்.

19ம் தேதி அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து புதன் ராசிக்கு மாறுகிறார்.

19ம் தேதி ராசியில் இருந்து சுக்கிரன் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

வேகமாக எதையும் செய்தாலும் அதில் உள்ள நன்மை தீமை அறிந்து செயல்படும் கன்னி ராசி அன்பர்களே இந்த மாதம் திட்டமிட்டபடி காரியங்கள் நடந்து முடியாமல் இழுபறியாக இருக்கும். ராசியாதிபதி புதன் சஞ்சாரம் வீண் வாக்குவாதங்களை ஏற்படுத்தும். எந்த காரியத்தையும் கடின பிரயாசைக்கு பிறகே செய்ய வேண்டி இருக்கும். ஆனாலும் குரு ராசியில் சஞ்சாரம் செய்வதால் வாகன லாபம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

குடும்பத்தில் காணாமல் போன சந்தோஷம் மீண்டும் வரும். கணவன் மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த கருத்து மோதல்கள் மறையும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தேங்கி இருந்த சரக்குகள் விற்பனையாகும். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பான பலன் கிடைக்க பெறுவார்கள். புதிய பொறுப்புகள் சேரும். வேலை தேடியவர்களுக்கு வேலை கிடைக்கும். தேவையற்ற வீண் வாக்குவாதம் ஏற்படும். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பிடிவாதத்தை விட்டு விடுவது காரிய வெற்றிக்கு உதவும். வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம்.

பெண்களுக்கு வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரியங்களை செய்து முடிப்பதில் கடினமான நிலை காணப்படும்.

கலைத்துறையினருக்கு வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. தங்கள் உடைமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம். தனிமையாக இருக்க நினைப்பீர்கள்.

அரசியல் மற்றும் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது. பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.

உடல்நலனைப் பொறுத்தவரை காய்ச்சல் ஏற்படலாம். தண்ணீரைக் காய்ச்சி அருந்துவது நன்மையைத் தரும்.

உத்திரம்:

இந்த மாதம் தொழிலை விரிவாக்கம் செய்வது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபடுவீர்கள். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க பெறலாம். மேல் அதிகாரிகளால் உத்தியோகஸ்தர்களுக்கு நன்மை உண்டாகும்.

ஹஸ்தம்:

இந்த மாதம் எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நல்லது. பேச்சின் இனிமை சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடிய உதவும். காரியங்களில் தாமதம் உண்டாகலாம். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

சித்திரை:

இந்த மாதம் தொழில் வியாபாரம் மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையிலும் முழுகவனத்துடன் ஈடுபடுவது நல்லது.

பரிகாரம்: ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வணங்கி வர உடல் ஆரோக்கியம் பெறும். குடும்ப பிரச்சனை தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், புதன், வெள்ளி; தேய்பிறை: திங்கள், புதன், வியாழன்;

சந்திராஷ்டம தினங்கள் : 20, 21, 22

அதிர்ஷ்ட தினங்கள்: 14, 15

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

கிரகநிலை:

அஷ்டம ஸ்தானத்தில் குரு – பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் – லாப ஸ்தானத்தில் சூரியன், புதன் – அயன சயன போக ஸ்தானத்தில் சுக்கிரன், கேது – பஞசம ஸ்தானத்தில் சனி (வ) – ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு என வலம் வருகிறார்கள்.

கிரகமாற்றங்கள்:

17ம் தேதி லாப ஸ்தானத்தில் இருந்து சூரியன் அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

19ம் தேதி லாப ஸ்தானத்தில் இருந்து புதன் அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

19ம் தேதி அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் ராசிக்கு மாறுகிறார்.

பலன்:

அனைத்திலும் ஒரே நிலையை கடைபிடிக்கும் துலா ராசி அன்பர்களே இந்த மாதம் ராசிநாதன் சுக்கிரனின் சஞ்சாரத்தால் மனதில் உறுதி பிறக்கும். எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பாலினத்தாரால் நன்மை உண்டாகும். வீண் செலவு உண்டாகும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும்.

குடும்ப நிம்மதி குறையக்கூடும். கணவன், மனைவிக்கிடையே மனம் வருந்தும்படியான நிலை ஏற்படும். வீடு வாகனங்களுக்கான செலவு கூடும். பிள்ளைகளுக்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். லாபம் குறையக்கூடும். பயணம் மூலம் சாதகம் கிடைக்கும். கடித போக்குவரத்து நன்மை தரும். வியாபாரம் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டிவரும். புதுவியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டி இருக்கும். பொறுப்புடன் செயலாற்றுவது நல்லது. புதிய பொறுப்புகள் சுமையாக வரும். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

பெண்களுக்கு எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். செலவு அதிகாரிக்கும். பயணம் செல்ல நேரலாம். மற்றவர்களுக்காக பொறுப்புக்களை ஏற்பதை தவிர்ப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். காரியதாமதம் ஏற்படும். வீண்கவலை இருக்கும். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் நன்றாக ஆலோசனை நடத்தவும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும். அடுத்தவர்கள் கடமைக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும்.

மாணவர்களுக்கு கவன தடுமாற்றம் ஏற்படாமல் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புகள் கூடும்.

ராசியாதிபதி சுக்கிரன் சஞ்சாரத்தால் உடல் ஆரோக்கியம் உண்டாகும். ஆனாலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் உணவுக் கட்டுப்பாட்டை அனுசரிப்பது நல்லது.

சித்திரை:

இந்த மாதம் நக்ஷத்ராதிபதி செவ்வாயின் சஞ்சாரத்தால் குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிந்தனை அதிகரிக்கும். எந்த காரியத்திலும் ஈடுபடும் முன்பு திட்டமிட்டு செயல்படுவது நல்லது. பணவரத்து தாமதப்படும்.

ஸ்வாதி:

இந்த மாதம் காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத செலவு உண்டாகும். சொத்து மனை சம்பந்தமான காரியங்களில் தடை, தாமதம் ஏற்படலாம். வீண்பயம் ஏற்படும். ஏற்கனவே செய்த காரியங்களுக்கான பலனை அடைய வேண்டி இருக்கும். வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம்

விசாகம்:

இந்த மாதம் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. வெளிநாட்டு பயண வாய்ப்புகள் வரலாம். சிலர் வெளியூர் பயணம் செல்வார்கள். எதிர்பாலினத்தாருடன் பழகும் போது கவனம் தேவை. மனதில் தெம்பு உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பரிகாரம்: வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாரியம்மனை வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். குடும்ப ஒற்றுமை ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: சந்திரன், சுக்கிரன்; தேய்பிறை: சந்திரன், சுக்கிரன்

சந்திராஷ்டம தினங்கள் : 23, 24

அதிர்ஷ்ட தினங்கள்: 16, 17

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

கிரகநிலை:

களத்திர ஸ்தானத்தில் குரு – அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் – தொழில் ஸ்தானத்தில் சூரியன், புதன் – லாப ஸ்தானத்தில் சுக்கிரன், கேது – சுக ஸ்தானத்தில் சனி (வ) – பஞசம ஸ்தானத்தில் ராகு என வலம் வருகிறார்கள்.

கிரகமாற்றங்கள்:

17ம் தேதி தொழில் ஸ்தானத்தில் இருந்து சூரியன் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

19ம் தேதி தொழில் ஸ்தானத்தில் இருந்து புதன் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

19ம் தேதி லாப ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

லாப நஷ்டங்களை கணக்கிடும் குணமுடைய விருச்சிக ராசி அன்பர்களே இந்த மாதம் ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தால் வீண் வாக்குவாதங்கள் அகலும். மனதில் உற்சாகம் ஏற்படும். வீண் பகை உண்டாகலாம். நண்பர்களிடம் இருந்து பிரிய வேண்டி இருக்கும். கவுரவ பங்கம் ஏற்படாமல் கவனமாக செயல்படுவது நல்லது.

குடும்பத்தில் ஏதாவது சிறு சிறு சண்டைகள் ஏற்படலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். சகோதரர்கள், தகப்பனாரிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.

தொழில் வியாபாரத்தில் தேவையற்ற இடர்பாடுகள் ஏற்படலாம். பார்ட்னர்களை அனுசரித்து செல்வது நல்லது. கடன் கொடுக்கும்போது கவனம் தேவை. வாகன வசதி உண்டாகும். அடுத்தவர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை. புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குறிக்கோளற்ற வீண் அலைச்சல், கூடுதல் உழைப்பும் இருக்கும். சக ஊழியர்களுடன் சாமர்த்தியமாக பழகி காரிய அனுகூலம் அடைவீர்கள். அலுவலக விவகாரங்களில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். மேலிடத்தில் மனம் விட்டு பேசுவது கருத்து வேற்றுமை ஏற்படாமல் தடுக்கும்.

பெண்களுக்கு சமையல் செய்யும்போது கவனம் தேவை. எதிலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது.

கலைத்துறையினருக்கு வெளிநாடு வாய்ப்புகள் வந்து சேரும். எதிர்பார்த்த தனவரவு கிட்டும். உங்களின் திறமை பளிச்சிடும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். ஆனாலும் எதிலும் எச்சரிக்கையாக பேசுவது நல்லது.

மாணவர்களுக்கு இருசக்கர வாகனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை. பாடங்களை கவனமாக படிப்பது நல்லது.

உடலநலனைப் பொறுத்தமட்டில் தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை.

விசாகம்:

இந்த மாதம் வாழ்க்கை துணை மூலம் ஆதாயம் கிடைக்க பெறுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். அவர்களின் ஆதரவும் கிடைக்கும். செலவுகள் ஏற்படும். பயண சுகம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் கிடைப்பது தாமதப்படும்.

அனுஷம்:

இந்த மாதம் தேவையான பணஉதவி கிடைக்கலாம். மறைமுக எதிர்ப்புகள் விலகும். எதிரிகளும் நண்பராவார்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கு பின்னால் உங்களை பற்றி புறம் பேசியவர்கள் உங்களிடம் சரண் அடைவார்கள். எதிலும் எச்சரிக்கை தேவை.

கேட்டை:

இந்த மாதம் எதிர்பாராத செலவு உண்டாகும். எதிர் பார்த்த வெற்றி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். எதிர்பாராத பணவரத்தும் இருக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கையும் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்ப்புகள் நீங்கும்.

பரிகாரம்: கந்தசஷ்டி கவசம் படித்து முருகப் பெருமானை வணங்கி வர எதிர்ப்புகள் விலகும். குடும்ப பிரச்சனைகள் தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, புதன், வெள்ளி; தேய்பிறை: ஞாயிறு, வியாழன், வெள்ளி;

சந்திராஷ்டம தினங்கள் : 25, 26

அதிர்ஷ்ட தினங்கள்: 18, 19

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

கிரகநிலை:

ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு – களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் – பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், புதன் – தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன், கேது – தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) – சுக ஸ்தானத்தில் ராகு என வலம் வருகிறார்கள்.

கிரகமாற்றங்கள்:

17ம் தேதி பாக்கிய ஸ்தானத்தில் இருந்து சூரியன் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

19ம் தேதி பாக்கிய ஸ்தானத்தில் இருந்து புதன் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

19ம் தேதி தொழில் ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

மனதில் ஒன்று வைத்து வெளியில் ஒன்று பேசாத குணமுடைய தனசு ராசி அன்பர்களே இந்த மாதம் தன்னம்பிக்கை வளரும். பணவரவு திருப்தி தரும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். வாக்கு ஸ்தானத்தை ராசிநாதன் குரு பார்க்கிறார். வாக்கு வன்மை அதிகரிக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். ஆனாலும் தேவையற்ற வீண் பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. அறிவுத்திறன் அதிகரிக்கும். பெயருக்கும், புகழுக்கும் பங்கம் வரலாம்.

தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும். இது வரை இருந்த தொய்வு நீங்கும். லாபம் அதிகரிக்கும். இனிமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்வீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்களை செய்து முடிப்பதில் திறமை வெளிப்படும் பணவரத்து கூடும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி தேடிவரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். கூடுதல் பணி காரணமாக உடல்சோர்வு உண்டாகலாம். சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான உறவு காணப்படும். பிள்ளை கள் கல்வியிலும் மற்ற வகையிலும் சிறந்து விளங்குவார்கள். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும்.

பெண்களுக்கு திட்டமிட்டப்படி எதையும் செய்து முடிப்பீர்கள். மனோதிடம் கூடும்.

கலைத்துறையினருக்கு ராசியில் சனி இருப்பதால் கவனமாக பேசுவது நல்லது. வீண்பழி உண்டாகலாம். வேலைகளில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம்.

அரசியலில் உள்ளவர்களுக்கு கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும். எதிர்பார்த்த கடன் வசதி கிடைக்கும். புதிய பதவிகள் வரும்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். சக மாணவர்களுடன் நல்லுறவு காணப்படும்.

உடல்நலனைப் பொறுத்தமட்டில் காய்ச்சல் தலைவலி ஏற்படும். மருத்துவ செலவு அதிகரிக்கும். கவனம் தேவை.

மூலம்:

இந்த மாதம் தடைகள் நீங்கும். எதிர்ப்புகள் விலகும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தது போல் இருக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கலாம். பாதியில் நின்ற காரியங்களை தொடர்ந்து செய்து முடிப்பீர்கள். திடீர் குழப்பம் ஏற்படலாம். தீ, எந்திரம் ஆகியவற்றை கையாளும்போது கவனம் தேவை.

பூராடம்:

இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயலாற்றுவது நல்லது. குடும்பத்தில் சிறு சண்டைகள் உண்டாகலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நன்மை தரும்.

உத்திராடம்:

இந்த மாதம் மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சமையல் செய்யும் போதும் மின் சாதனங்களை இயக்கும் போதும் கவனம் தேவை. முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். தொழில் தொடர்பான காரியங்களை யோசித்து செய்வது நல்ல பலன் தரும். வீண் கவலை ஏற்பட்டு நீங்கும். பணவரத்து திருப்தி தரும். புத்தி சாதூர்யத்தால் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமையில் நெய்தீபம் ஏற்றி வணங்க எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். செயல் திறமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், புதன், வெள்ளி; தேய்பிறை: திங்கள், வியாழன், வெள்ளி;

சந்திராஷ்டம தினங்கள் : 1, 27, 28

அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21, 22

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

கிரகநிலை:

பஞசம ஸ்தானத்தில் குரு – ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் – அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், புதன் – பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன், கேது – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) – தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு என வலம் வருகிறார்கள்.

கிரகமாற்றங்கள்:

17ம் தேதி அஷ்டம ஸ்தானத்தில் இருந்து சூரியன் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

19ம் தேதி அஷ்டம ஸ்தானத்தில் இருந்து புதன் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

19ம் தேதி பாக்கிய ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

எதிலும் பின்வாங்காத அஞ்சாநெஞ்சம் உடைய மகர ராசி அன்பர்களே இந்த மாதம் ராசிநாதன் சனியின் சஞ்சாரத்தால் வீண் செலவுகள் குறையும். பணவரத்து அதிகரிக்கும். காரியங்களில் இருந்து வந்த தாமதம் அகலும். மிகவும் வேண்டியவரை பிரிய நேரிடும். கண்மூடித்தனமாக எதையும் செய்யாமல் யோசித்து செய்வது நல்லது. இருக்கும் இடத்தை விட்டு வெளியேற வேண்டி இருக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் தாமதப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தடைகள் உண்டாகலாம். வீண் அலைச்சலும், பண விரயமும் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். அலுவலக பணிகளை கூடுதல் கவனமுடன் செய்வது நல்லது.

குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான ஏதாவது சம்பவங்கள் நடக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மன வருத்தம் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. நண்பர்கள் உறவினர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. தாய், தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் தீர ஆலோசனை செய்வது நல்லது. எதிலும் கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

அரசியலில் உள்ளவர்களுக்கு மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தனலாபம் அதிகரிக்கும். சிறப்பான பலன் கிடைக்க பெறுவீர்கள். புதிய பொறுப்புகள் சேரும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கடின உழைப்பு தேவை. எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது. விளையாட்டில் ஆர்வம் உண்டாகும். பாடங்களை கவனமாக படிப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.

உடல்நலனைப் பொறுத்தமட்டில் உடற்சோர்வு மன சோர்வு வரலாம்.

உத்திராடம்:

இந்த மாதம் மேலிடம் நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கவில்லையே என்ற எண்ணம் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். நீங்கள் மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் தயங்க மாட்டீர்கள். பேச்சு திறமை அதிகரிக்கும். தொழில் வியாபாரம் சிறிது மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் குறையாத நிலை இருக்கும்.

திருவோணம்:

இந்த மாதம் போட்டிகள் பற்றிய கவலையை விட்டுவிட்டு தொழில் வியாபாரத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியூர் மாற்றங்கள் உண்டாகலாம். சக ஊழியர்களிடம் பேசும்போது கோபப்படாமல் இருப்பது நன்மை தரும்.

அவிட்டம்:

இந்த மாதம் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்த மனத்தாங்கல் நீங்கி மகிழ்ச்சியும், சகஜ நிலையும் காணப்படும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் பேசும் போது நிதானமாக பேசுவது நல்லது. வாகன வசதி உண்டாகும். அடுத்தவர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். கவனம் தேவை.

பரிகாரம்: சனிக்கிழமையில் சனி பகவானை வணங்கி காகத்திற்கு எள் சாதம் வைத்து வர உடல் ஆரோக்கிய மடையும். வீண் அலைச்சல் குறையும். கடினமான பணிகள் எளிதாக முடியும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், வெள்ளி; தேய்பிறை: திங்கள், வெள்ளி;

சந்திராஷ்டம தினங்கள் : 2, 3, 4, 29, 30

அதிர்ஷ்ட தினங்கள்: 23, 24

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

கிரகநிலை:

சுக ஸ்தானத்தில் குரு – பஞசம ஸ்தானத்தில் செவ்வாய் – களத்திர ஸ்தானத்தில் சூரியன், புதன் – அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன், கேது – ராசியில் சனி (வ) – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு என வலம் வருகிறார்கள்.

கிரகமாற்றங்கள்:

17ம் தேதி களத்திர ஸ்தானத்தில் இருந்து சூரியன் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

19ம் தேதி களத்திர ஸ்தானத்தில் இருந்து புதன் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

19ம் தேதி அஷ்டம ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

துன்பத்தையும், இன்பமாக மாற்றும் வல்லமை பெற்ற கும்பராசியினரே இந்த மாதம் ராசிநாதனின் சஞ்சாரம் எல்லா வகையிலும் நன்மை உண்டாக்கும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்து மதிப்பு கிடைக்க பெறுவீர்கள். ராசியாதிபதி சனியின் சஞ்சாரம் உடல் உழைப்பை அதிகரிக்க செய்யும். குறிக்கோளற்ற பயணங்கள் உண்டாகும். விழிப்புடன் இருப்பது நல்லது. விரையஸ்தானத்தை சுபகாரகன் குரு பார்ப்பதால் சுப செலவுகள் உண்டாகும். கையிருப்பு கரையும். ஆன்மீக யாத்திரைகள் சென்று வருவீர்கள்.

தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் சுமூகமாக செல்வது நல்லது. பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்யவேண்டி இருக்கும். வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு செல்லலாமா என்று கூட தோன்றலாம். மனம் தளராமல் இருப்பது நல்லது. வாகனம், வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தடங்கல்கள், கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும்.

குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனஸ்தாபம் ஏற்படலாம். பிள்ளைகள் கல்விக்கான செலவு அதிகரிக்கும். அத்துடன் தேவையானவற்றையும் வாங்கி தருவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன்முகம் கொடுத்து பேசுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.

பெண்களுக்கு அடுத்தவர்கள் பொறுப்புகளை ஏற்காமல் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் வரலாம். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆன்மீக பயணம் செல்வதில் விருப்பம் உண்டாகும்.

கலைத்துறையினருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் கை கூடி வரும். அதிகமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டி வரும். உடன் பணிபுரியும் பணியாளர்களால் நன்மை ஏற்படும்.

அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த பதவிகளை அடைவீர்கள். மேலிடத்தின் மூலம் உங்கள் காரியங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்படும்.

மாணவர்களுக்கு மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது அவசியம். வீண் விவகாரங்களை விட்டு விலகுவது நல்லது.

உடல்நலனைப் பொறுத்தமட்டில் ஜலதோஷ தொந்தரவு ஏற்படலாம். தலையில் நீ கோர்த்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ளவும்.

அவிட்டம்:

இந்த மாதம் நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை. அதிக கோபத்தால் வீண்பகை உண்டாகலாம். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பண வரத்து தாமதப்படும். கோபத்தை தவிர்ப்பது நல்லது.

ஸதயம்:

இந்த மாதம் செலவு அதிகரிக்கும். பயணங்கள் மூலம் வீண் அலைச்சலும், காரிய தாமதமும் உண்டாகும். நன்மை ஏற்படும். புதிய நட்புகள் கிடைக்கும். எடுத்த காரியங்கள் கை கூடும். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

பூரட்டாதி:

இந்த மாதம் தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்: பகவத்கீதை படித்து ஸ்ரீகிருஷ்ணனை வணங்கி வர எல்லா பிரச்சனைகளும் தீரும். மன மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, செவ்வாய், வியாழன்; தேய்பிறை: செவ்வாய், வியாழன்;

சந்திராஷ்டம தினங்கள் : 5, 6

அதிர்ஷ்ட தினங்கள்: 25, 26

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

கிரகநிலை:

தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு – சுக ஸ்தானத்தில் செவ்வாய் – ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், புதன் – களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன், கேது – அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) – ராசியில் ராகு என வலம் வருகிறார்கள்.

கிரகமாற்றங்கள்:

17ம் தேதி ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து சூரியன் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

19ம் தேதி ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து புதன் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

19ம் தேதி களத்திர ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

மற்றவர்களுக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் தான் செல்வது தான் சரி என்று உறுதியாக கூறும் மீன ராசிஅன்பர்களே இந்த மாதம் ராசிநாதன் குரு மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கிறார். தனாதிபதி செவ்வாயின் சஞ்சாரம் காரிய அனுகூலங்களை தரும். மனோதிடம் அதிகரிக்கும். பயன் தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். செல்வம் சேரும். வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். லாபம் அதிகாரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும். அரசாங்கத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு உண்டாகும். வேலைப்பளு குறையும். திடீர் நெருக்கடிகள் ஏற்படலாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பயனற்ற பயணங்கள் உண்டாகலாம்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். கணவன், மனைவிக் கிடையே நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளின் செயல்கள் சந்தோஷத்தை தரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி திருப்தியடைவீர்கள். எண்ணியபடி செயல்களை செய்து காரிய வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

பெண்களுக்கு மனதில் துணிச்சல் அதிகரிக்கும். திட்டமிட்டபடி செய லாற்றி காரிய அனுகூலம் பெறுவீர்கள்.

கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். புது ஒப்பந்தங்கள் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும். புதிய பொறுப்புகள் சுமையாக வரும். நிதானம் தேவை.

அரசியல்துறையினருக்கு அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை.

மாணவர்களுக்கு பாடங்களை படிப்பது வேகம் பெறும். கல்வியில் வெற்றி பெறுவீர்கள்.

உடல்நலனைப் பொறுத்தவரை பசியின்மை ஏற்படலாம்.

பூரட்டாதி:

இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கையால் மன உளைச்சல் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே வாக்கு வாதங்கள் உண்டாகாமல் தவிர்ப்பது நன்மை தரும். பிள்ளைகளுடன் சகஜமாக பேசி வருவது நல்லது. அவர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

உத்திரட்டாதி:

இந்த மாதம் வீண் அலைச்சலும் காரிய தாமதமும் ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புக்களை ஏற்பதை தவிர்ப்பது நல்லது. எதிர்பாலினத்தவரிடம் பழகும்போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் வீண் அலைச்சல் குறையும். நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். நினைக்கும் காரியங்கள் தள்ளிபோகலாம்.

ரேவதி:

இந்த மாதம் சக ஊழியர்களிடம் சகஜமாக பேசி பழகுவது நல்லது. பணவரத்து அதிகமாகும். எதிர்ப்புகள் நீங்கி எதிலும் உற்சாகம் உண்டாகும். மனமகிழ்ச்சிக்காக பணம் செலவு செய்ய தயங்க மாட்டீர்கள். நண்பர்கள் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும்.

பரிகாரம்: விநாயக பெருமானை தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வணங்க எல்லா கஷ்டங்களும் நீங்கும். மன நிம்மதி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, செவ்வாய், வியாழன்; தேய்பிறை: செவ்வாய், வியாழன், வெள்ளி;

சந்திராஷ்டம தினங்கள் : 7, 8

அதிர்ஷ்ட தினங்கள்: 1, 27, 28

You may also like

© RajTamil Network – 2024