Wednesday, September 25, 2024

தள்ளிப்போகிறதா தவெக மாநாடு? அனுமதி கிடைப்பதில் சிக்கல்?

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை வருகின்ற 23ஆம் தேதி நடத்துவதற்கு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் அனுமதி கோரி கட்சித் தரப்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் விடுமுறையில் இருப்பதால் மாநாட்டுக்கு இதுவரை காவல்துறை தரப்பில் அனுமதி வழங்கப்படவில்லை.

இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம், மாநாடு குறித்து 21 கேள்விகள் எழுப்பிய காவல்துறை பதிலளிக்க நோட்டீஸ் வழங்கியுள்ளது.

மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரபலங்களின் விவரம், மாநாட்டு மேடையில் அளவு, அத்தியாவசிய வசதிகள், வாகன நிறுத்துடம், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது.

இதனிடையே, விடுமுறை முடிந்து விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் இன்று பணிக்கு திரும்பும் நிலையில், மாநாடுக்கு அனுமதி வழங்கப்படுவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அயலகத்தில் இருக்கிறேன் என்ற உணர்வே எழவில்லை: முதல்வர் ஸ்டாலின்

இந்த நிலையில், தவெக மாநாடு தள்ளிப் போனால் வேறெந்த தேதியில் நடத்துவது என்பது குறித்து கட்சித் தலைவர் விஜய்யின் ஜோதிடரை சந்தித்து புஸ்ஸி ஆனந்த் பேசியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காவல்துறை தரப்பில் இருந்து அனுமதி கிடைக்க தாமதம் ஏற்பட்டால், கட்சியின் மாநாட்டை அடுத்தாண்டு ஜனவரியில் நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த 3 மாதங்கள் மழைக் காலம் என்பதால், மாநாடு நடந்தினால் சரியாக இருக்காது என்று விஜய் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்னதாக கட்சியின் கொடியை அறிமுகம் செய்துவைத்தார்.

கொடி சிவப்பு, மஞ்சள் என இரு வண்ணங்கள் மத்தியில் 2 போர் யானைகள் வாகை மலருடன் வடிவமைக்கப்பட்டுள்ள கொடியும், கொடிப் பாடலும் விஜய்யின் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து, மாபெரும் மாநில மாநாட்டை நடத்தி கட்சியின் கொடி மற்றும் பாடல் குறித்தும், கட்சியின் கொள்கை குறித்தும் நடிகர் விஜய் விளக்கம் அளிக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024