அரியானா தேர்தல்: பாஜகவில் இணைந்த ஜனநாயக ஜனதா கட்சி எம்.எல்.ஏ.

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

சண்டிகர்,

அரியானாவில் முதல்-மந்திரி நயாப் சிங் சைனி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில், மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கும் அக்டோபர் 5ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியில் பிரசாரம், கூட்டணி, தொகுதி பங்கீடு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.

இதனிடையே, அரியானாவில் துஷ்யந்த் சவுதலா தலைமையிலான ஜனநாயக ஜனதா கட்சி செயல்பட்டு வருகிறது. இக்கட்சியை சேர்ந்த தேவேந்திர சிங் பப்லி தொஹனா தொகுதி எம்.எல்.ஏ.யாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், தேவேந்திர சிங் எம்.எல்.ஏ. இன்று ஜனநாயக ஜனதா கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்துள்ளார். அவருடன் சேர்ந்து ஜனநாயக ஜனதா கட்சியின் நிர்வாகிகள் சுனில் சங்வான் மற்றும் சஞ்சய் கப்லனா ஆகியோரும் பாஜகவில் இணைந்தனர்.

பாஜகவில் இணைந்தபின் செய்தியாளர்களிடம் பேசிய தேவேந்திர சிங், அரியானாவில் பாஜக ஆதரவு அலை வீசுகிறது. அரியானாவில் தொடர்ந்து 3வது முறையாக பாஜக ஆட்சியை பிடிக்கும்' என்றார்.

You may also like

© RajTamil Network – 2024