Tuesday, September 24, 2024

172 ரன்களுக்கு ஆட்டமிழந்த பாகிஸ்தான்; வங்கதேசத்துக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்!

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வங்கதேசத்துக்கு இன்னும் 143 ரன்கள் தேவைப்படுகின்றன.

பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 274 ரன்களுக்கும், வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 262 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன.

பாட்மின்டனிலிருந்து ஓய்வு பெறுகிறாரா சாய்னா நேவால்?

பாகிஸ்தான் (172/10)

வங்கதேசம் 262 ரன்களில் ஆட்டமிழந்ததன் மூலம், பாகிஸ்தான் அணி 12 ரன்கள் முன்னிலை பெற்றது. 12 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான், மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 9 ரன்கள் எடுத்திருந்தது.

21 ரன்கள் முன்னிலையுடன் பாகிஸ்தான் அணி 4-வது நாள் ஆட்டத்தைத் தொடங்கியது. வங்கதேச வீரர் ஹாசன் மஹ்முத்தின் அசத்தலான பந்துவீச்சினால் பாகிஸ்தான் அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அகா சல்மான் 47 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அவரைத் தொடர்ந்து, முகமது ரிஸ்வான் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார்.

மகன் வாழ்க்கையை அழித்த தோனியை மன்னிக்கவே மாட்டேன்: யுவராஜ் தந்தை

5 விக்கெட்டுகள்

வங்கதேசம் தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹாசன் மஹ்முத் டெஸ்ட் போட்டிகளில் முதல் முறையாக 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நஹித் ராணா 4 விக்கெட்டுகளையும், டஸ்கின் அகமது ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

185 ரன்கள் இலக்கு

பாகிஸ்தான் அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்ததையடுத்து, 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்கதேசம் அதன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது.

4-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேசம் அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்துள்ளது. ஜாகீர் ஹாசன் 31 ரன்களுடனும், ஷாத்மன் இஸ்லாம் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

பாராலிம்பிக்கில் பிரீத்தி பால் சாதனை: இந்தியாவுக்கு 7-ஆவது பதக்கம்!

வங்கதேசத்தின் வெற்றிக்கு கடைசி நாளில் 143 ரன்கள் தேவைப்படுகின்றன.

You may also like

© RajTamil Network – 2024