Tuesday, September 24, 2024

வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் ரகசிய பூஜையின் பின்னணி என்ன?

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் ரகசிய பூஜை நடத்தியதாக வந்த புகாருக்கு விளக்கம் கேட்டு காவல் ஆய்வாளருக்கு மெமோ அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதன் பின்னணி என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

குற்றங்கள் குறைய வேண்டும் என்றுகூறி, காவல்நிலையத்துக்குள் பரிகார பூஜை நடத்தப்பட்டதாக வெளியான தகவலுக்கு பல்வேறு கட்சிகளும் கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துள்ளன.

கரூர் மற்றம் திருப்பூர் இடையே வெள்ளக்கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஆகஸ்ட் 26ஆம் தேதி நள்ளிரவில் பரிகார பூஜை நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து சனிக்கிழமை காங்கேயம் டிஎஸ்பிக்கு புகார் அளிக்கப்பட்டதன் மூலம் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

காவல்நிலையத்தில் பரிகார பூஜை செய்வது, சட்டத்தை மீறிய செயலாகும். எனவே, காவல்துறை ஆய்வாளர் ஞானப்பிரகாசம் மீது நடவடிக்கை எடுகக் வேண்டும் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், சட்டப்படி, அரசு அலுவலகங்களில், ஆயுத பூஜை உள்பட எந்த விதமான வழிபாடுகளும் நடத்தப்படக்கூடாது என்பது சட்டம் என்றும் தெரிவித்துள்ளனர்.

வெள்ளக்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் ஞானப்பிரகாசம் ஏற்பாட்டின் பேரில், காவல் நிலையத்தில் ஆகஸ்ட் 26 ஆம் தேதி ரகசிய பூஜை ஒன்று நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. காவல்நிலையம் தரப்பில், இது பரிகார பூஜை என்றும், வெள்ளக்கோவில் காவல்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் அதிகரித்துள்ள குற்றச் சம்பவங்களைக் குறைக்கும் வகையில் இந்த ரகசிய பூஜை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அரசு விதிமுறைகளை மீறி பூஜை நடத்திய காவல் ஆய்வாளா், உடந்தையாக இருந்த போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினா், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், திராவிடா் கழகம், தபெதிக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், புரட்சிகர இளைஞா் முன்னணியினா் உள்பட பல்வேறு தரப்பினா் காங்கயம் காவல் துணைக் கண்காணிப்பாளா் மாயவனிடம் புகாா் அளித்தனா்.

இச்சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு வெள்ளக்கோவில் காவல் நிலைய ஆய்வாளருக்கு, திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா மெமோ அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You may also like

© RajTamil Network – 2024