Tuesday, September 24, 2024

பசுப் பாதுகாவலர்கள் அட்டூழியம்! ஹரியாணாவில் பள்ளிச் சிறுவன் சுட்டுக் கொலை!

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

ஹரியாணாவில் பசுவைக் கடத்திச் செல்வதாக நினைத்து பள்ளி மாணவனை பசுப் பாதுகாப்புக் குழுவினர் சுட்டு கொன்றுள்ளனர்.

கடந்த வாரம் மேற்கு வங்கத்தை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவர் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக ஹரியாணாவில் அடித்துக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் வெளிவந்துள்ளது.

மாட்டிறைச்சி சாப்பிட்டதாக புலம்பெயா் தொழிலாளா் கும்பல் கொலை: 5 போ் கைது

25 கி.மீ. துரத்திச் சென்று கொலை

ஹரியாணா மாநிலம் ஃபரிதாபாத்தை சேர்ந்தவர் ஆரியன் மிஸ்ரா(வயது 19) என்ற 12ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர். கடந்த 23ஆம் தேதி தனது நண்பர்களான ஹர்சித் மற்றும் சங்கியுடன் சாப்பிடுவதற்காக காரில் உணவகம் சென்றுள்ளார் ஆரியன்.

அப்போது, பசுவைக் கடத்துவதாக ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில், பசுப் பாதுகாப்புக் குழுவினர் எனக் கூறப்படும் சிலர் ஆரியனின் காரை நிறுத்துமாறு தெரிவித்துள்ளனர்.

ஆனால், கார் நிற்காமல் சென்ற நிலையில், சுமார் 25 கிலோ மீட்டர் நண்பர்களுடன் சென்ற ஆரியனின் காரை பசுப் பாதுகாவலர்கள் துரத்திச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், பல்வால் என்ற பகுதியில் உள்ள சுங்கச்சாவடியின் தடுப்பில் மோதி ஆரியனின் கார் விபத்துக்குள்ளானது. அந்த காரின் மீது பசுப் பாதுகாவலர்கள் துப்பாக்கியால் சுட்டதில், ஆரியனின் நெஞ்சுப் பகுதியில் குண்டு பாய்ந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, பசுப் பாதுகாப்பு குழுவினர் எனக் கூறப்படும் அனில் கௌசிக், வருண், கிருஷ்ணா, ஆதேஷ் மற்றும் செளரவ் ஆகியோரை கைது செய்து, துப்பாக்கியையும் பறிமுதல் செய்துள்ளனர்.

ஹரியாணாவில் பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் அடுத்தடுத்து இரு கும்பல் கொலை நடத்தப்பட்டுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

புலம்பெயர் தொழிலாளி கொலை

ஹரியாணாவில் கடந்த வாரம் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த சபீா் மாலிக் என்ற புலம்பெயா் தொழிலாளி மாட்டிறைச்சி சாப்பிட்டதாக சந்தேகம் எழுந்ததையடுத்து அவரை பசுப் பாதுகாப்புக் குழுவைச் சோ்ந்த 5 போ் அடித்துக்கொலை செய்துள்ளனா்.

பழைய பொருள்களை சேகரித்து விற்பனை செய்யும் மாலிக்கை, காலி பிளாஸ்டிக் பாட்டில்களை விற்பனை செய்வதாகக்கூறி அங்குள்ள கடைக்கு வரவழைத்து குற்றம்சாட்டப்பட்ட 5 பேரும் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனா்.

இதையடுத்து, சபீா் மாலிக்கை வேறு ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்று மீண்டும் கொடூரமாக தாக்கியதில் சபீா் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024