Tuesday, September 24, 2024

டாக்ஸிக் படப்பிடிப்பில் நயன்தாரா? ரசிகர்கள் உற்சாகம்!

by rajtamil
Published: Updated: 0 comment 8 views
A+A-
Reset

இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இத்தம்பதியினர், வாடகைத்தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்று பெற்றோர்களாகவும் இருக்கின்றனர். அவர்களது குழந்தைகளுக்கு உயிர், உலக் என வித்தியாசமாக பெயரிட்டுள்ளனர்.

கேஜிஎஃப், கேஜிஎஃப் – 2 திரைப்படங்கள் நடித்து இந்திய சினிமாவில் மிகப் பெரிய நடிகரானார் யஷ். தற்போது, யஷ் மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் டாக்ஸிக் (Toxic) எனப் பெயரிட்டுள்ள படத்தில் நடிக்கிறார்.

இந்தப்படம் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. கேவிஎன் புரோடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது.

டாக்ஸிக் பட பூஜை

இப்படத்தின் பூஜை சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்றதுடன் படப்பிடிப்பும் துவங்கியது. இப்படத்தின் நாயகியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் கால்களை மட்டும் பதிவிட்டு, “உங்களுக்கு தேவையானது தன்னம்பிக்கையும் பூட்ஸ்களும் மட்டுமே” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக சுற்றுலா சென்றால் கணவர், மகன்களுடனே புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். இதில் நயன்தாரா மட்டுமே இருப்பதால் ரசிகர்கள் டாக்சிக் படத்தின் படப்பிடிப்பாக இருக்குமோ என யூகித்து வருகிறார்கள்.

மின்னல் முரளி 2 எப்போது? டோவினோ தாமஸ் பதில்!

5 படங்களில் நயன்தாரா

நடிகை நயன்தாரா ஏற்கனவே டெஸ்ட், மண்ணாங்கட்டி சின்ஸ் 1960, மலையாள படமொன்றும் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன்.

மேலும், லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநரான விஷ்ணு எடவன் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் கவினுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறார்.

இந்தப் படங்களின் வரிசையில் 5ஆவதாக டாக்ஸிக்கும் இடம் பிடித்துள்ளது.

அடுத்தாண்டு நயன்தாராவுக்கு மிகப் பெரிய ஆண்டாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

வைரலாகும் கிச்சா சுதீப்பின் பில்லா ரங்கா பாட்ஷா!

இயக்குநர் கீது மோகன்தாஸ்

பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான ராஜுவ் ரவியின் மனைவி கீது மோகன்தாஸ்.

லையர்ஸ் டைஸ் படம் இரண்டு தேசிய விருதுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. மூத்தோன் படமும் நல்ல கவனம் பெற்றது.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீது மோகன்தாஸ், தமிழில் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்தில் டின்னு என்கிற குழந்தை கதாபாத்திரத்தில் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024