Tuesday, September 24, 2024

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: போட்டி நடைபெறும் இடம், தேதி அறிவிப்பு!

by rajtamil
Published: Updated: 0 comment 4 views
A+A-
Reset

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறும் இடம் மற்றும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி முதல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஐசிசி தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் மூன்றாவது எடிசன் லார்ட்ஸ் மைதானத்தில் அடுத்த ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி முதல் நடத்தப்படவுள்ளது. போட்டி ஜூன் 11 ஆம் தேதி தொடங்கி ஜூன் 15 ஆம் தேதி வரை நடைபெறும். தேவைப்பட்டால், ரிசர்வ் நாளான ஜூன் 16 ஆம் தேதி பயன்படுத்திக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்து பேசிய பாட் கம்மின்ஸ்!

முதல் முறையாக லார்ட்ஸில்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி முதல் முறையாக லார்ட்ஸ் மைதானத்தில் நடத்தப்படவுள்ளது. முதல் முறையாக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சௌத்தாம்டனிலும், இரண்டாவது முறை ஓவலிலும் நடத்தப்பட்டது. இரண்டு முறையும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடிய இந்திய அணி, முதல் முறை நியூசிலாந்திடமும் இரண்டாவது முறை ஆஸ்திரேலியாவிடமும் தோல்வியடைந்தது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியல்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் தங்களுக்குள் மோதிக்கொள்ள உள்ளன. தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.

பாக். டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது வங்கதேசம்!

தரவரிசையில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை, தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் போன்ற அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

You may also like

© RajTamil Network – 2024