கொல்கத்தா சம்பவம்: சந்தீப் கோஷுக்கு 8 நாள்கள் சிபிஐ காவல்

by rajtamil
Published: Updated: 0 comment 9 views
A+A-
Reset

கொல்கத்தாவில் படுகொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் பணியாற்றி வந்த மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷை, எட்டு நாள்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொலை வழக்கில் தொடர்ந்து விசாரணைக்கு உள்படுத்தப்பட்டு வந்த சந்தீப் கோஷை, சிபிஐ திங்கள்கிழமை கைது செய்தது. மருத்துவமனையில் நிதி முறைகேடு புகார் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எதற்காகக் கைது?

மருத்துவமனையில் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ, 10 நாள்கள் விசாரணைக் காவல் கோரியிருந்த நிலையில், சிபிஐக்கு 8 நாள்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கில் இரண்டு வாரங்களுக்கும் மேல் சந்தீப் கோஷிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், திங்கள்கிழமை அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், சந்தீப் கோஷ் கூடுதல் செயலாளர் உள்பட மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

90% பேரால் பதில் சொல்ல முடியாத ஹார்வர்டு பல்கலை.யின் கேள்வி!

கடந்த மாதம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் மருத்துவர், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார்.

அவர் பணியாற்றிய மருத்துவமனையின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் முதல்வர் பொறுப்பை ராஜிநாமா செய்தார்.

You may also like

© RajTamil Network – 2024