ராஜஸ்தான் அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக ராகுல் திராவிட் நியமனம்!

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் திராவிட் 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் விலகினார். தற்போது இந்திய அணிக்கு கௌதம் கம்பீர் பயிற்சியாளராக பணியாற்றுகிறார்.

2025 ஐபிஎல் முதல் ராகுல் திராவிட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ராகுல் திராவிட்டின் தலைமையில் யு-19 கிரிக்கெட்டில் இருந்து சஞ்சு சாம்சன் விளையாடி வருவதால் இருவருக்கும் நல்ல புரிதல் இருப்பதாக ராஜஸ்தான் நிர்வாகம் நம்புகிறது.

குண்டு எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார் சச்சின் கிலாரி!

2012, 2013ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாக செயல்பட்ட ராகுல் திராவிட் 2014,2015ஆம் ஆண்டுகளில் அணியின் ஆலோலகராகவும் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

எந்தெந்த வீரர்களை அணியில் எடுக்கலாம் என்ற கலந்துரையாடல் நடந்துவருவதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

11 ஆண்டுகால ஐசிசி கோப்பையை ராகுல் தலைமையில் இந்திய அணி நிறைவேற்றியுள்ளது. விக்ரம் ரதோர் ராகுலுக்கு துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ராகுல் திராவிட் கிரிக்கெட் பயணம்

1994இல் இந்திய அணிக்காக விளையாடிய ராகுல் திராவிட் 2011இல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். 2012இல் டெஸ்டிலும் ஓய்வை அறிவித்த திராவிட் 2012இல் ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாக செயல்பட்டார்.

2016-2019: தில்லி அணியின் ஆலோசகர்.

2019-2021: தேசிய கிரிக்கெட் அகாதெமியின் தலைவராக இருந்தார்.

2021- 2024: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர்.

2015- 2021 – யு-19, இந்தியா ஏ அணிக்கு பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குமார் சங்ககாரா 2021 முதல் ராஜஸ்தான் அணிக்கு இயக்குநராக செயல்பட்டு வருகிறார்.

2008இல் முதன்முதலாக நடைபெற்ற ஐபிஎல் தொடரை வென்ற ராஜஸ்தான் அணி அதற்குப் பிறகு 6 முறை பிளே ஆஃப் வந்திருக்கிறது. 2022இல் இறுதிப் போட்டியிலும் விளையாடியுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024