கூலி – 1421 எண்ணிற்கு என்ன அர்த்தம்?

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset

கூலி திரைப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி கவனம் பெற்றுள்ளன.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் – நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் கூலி.

இப்படத்தில் நடிகர்கள் நாகர்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சௌபின் சாகிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில், இப்படத்தில் நடிக்கும் ரஜினி உள்பட முக்கிய கதாபாத்திரங்களின் போஸ்டர்கள் வெளியாகி கவனம் பெற்றது.

பிக்பாஸ் – 8 தொகுப்பாளர் யார்? இன்று அறிவிப்பு!

முக்கியமாக, தேவா என்கிற கதாபாத்திரத்தில் ரஜினி நடிப்பது ஆவலை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், போஸ்டரில் ரஜினி கையில் வைத்திருக்கும் குறிப்பட்டை (பேட்ஜ்) ஒன்றில் 1421 என்கிற எண் இடம் பெற்றுள்ளது. இது என்ன என்பது குறித்து பலருக்கும் கேள்விகள் எழுந்துள்ளன.

இதுதான் பதில் என உறுதியாகச் சொல்ல முடியாவிட்டாலும் சில ஊகங்கள் ஏற்படுகின்றன.

கூலி திரைப்படம் முழுக்க முழுக்க தங்கக் கடத்தலை மையமாகக்கொண்டே உருவாகி வருவதால், 14 மற்றும் 21 என்பது தங்க கேரட்களைக் குறிப்பிடுவதாகவே தெரிகிறது. குறிப்பாக, 14 கேரட் இந்தியா, அமெரிக்கா, கனடா நாடுகளுக்கு உரியவையாகவே பார்க்கப்படுகின்றன. 21 கேரட் என்பது சௌதி உள்ளிட்ட அமீர நாடுகளில் அதிக பயன்படுத்தும் தங்க வகை.

கூலி ரஜினி போஸ்டர்!

இதில், 14 கேரட் என்பது தரமான 58.3 சதவீதம் தூய தங்கம் என்பதால் ஆபரணங்கள் செய்ய இவையே தேர்ந்தெடுக்கப்படுகின்றன. கூலி படத்தின் அறிவிப்பு விடியோவில் தங்கக் கட்டிகள் மற்றும் தங்கத்தால் செய்யப்பட்ட ஆபரணங்களும், கடிகாரங்களுமே அதிகம் இடம்பெற்றுள்ளன.

அதேபோல் துபை, கத்தார் உள்ளிட்ட அமீர நாடுகளிலிருந்தே இந்தியாவுக்கு அதிகமாக தங்கக் கட்டிகள் கடத்தி வரப்படுகின்றன. இதைக் குறிப்பிடும் விதமாகக் கூட 21 எண் இருக்கலாம்.

போஸ்டரில் 1421 எண்ணிற்குப் பின்னால் இரு தங்கக் கட்டிகளே இருப்பதால் நாம் இந்த முடிவுக்கே வர வேண்டியுள்ளது!

ஆந்திரம், தெலங்கானா வெள்ள நிவாரணம்: ரூ. 1 கோடி வழங்கிய அல்லு அர்ஜுன்!

You may also like

© RajTamil Network – 2024