வங்கக்கடலில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset

வடமேற்கு வங்கக்கடலில் நாளை (செப்.5) குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,

வடக்க ஆந்திரம் மற்றும் அதனை ஒட்டிய கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மத்தியமேற்கு மற்றும் அதனையொட்டிய வடமேற்கு வங்கக்கடலில் நாளை (செப்.5) குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.

இந்தூரில் பாலியல் வன்கொடுமை: காவல்துறை மெத்தனத்தால் நீதிமன்றத்தை நாடிய பெண்!

மேலும், தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செப்.10 வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

மோசமான பணிக் கலாசாரம்: மாதவிக்கு எதிராக செபி ஊழியர்கள் புகார்!

சென்னை மற்றும் புறநகர் வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்கள்..

செப்.8 வரை மன்னார் வளைகுடா தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

You may also like

© RajTamil Network – 2024