Sunday, September 22, 2024

ஜிடிபி-யில் ஜொலிக்கும் தென் மாநிலங்கள்.. தட்டி தூக்கும் தமிழ்நாடு

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

ஜி.டி.பி.யில் ஜொலிக்கும் தென்னிந்திய மாநிலங்கள்.. தட்டி தூக்கும் தமிழ்நாடுஜி.டி.பி.யில் ஜொலிக்கும் தென்னிந்திய மாநிலங்கள்.. தட்டி தூக்கும் தமிழ்நாடு

இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் ஏழு யூனியன் பிரதேசங்களில், 10 பெரிய மாநிலங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விவபரத்தை தேசிய பொருளாதாரம் மற்றும் புள்ளியல் இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. இதில் பல திகைப்பூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2% என இருக்கும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள 10 மாநிலங்களில் ஒரு மாநிலம் தேசிய சராசரியைவிட கூடுதலாக 1% பெற்று முதலிடத்திலும், மற்றொரு மாநிலம் தேசிய சராசரி அளவை பெற்று இரண்டாம் இடத்திலும் இருக்கின்றது. அதிலும், இந்த இரு மாநிலங்களும் தென் இந்தியாவில் இருப்பது தென் இந்தியர்களுக்கு இன்னும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

விளம்பரம்

தேசிய பொருளாதாரம் மற்றும் புள்ளியல் இயக்குநரகம் வெளியிட்டுள்ள விபரத்தின்படி தெலங்கானாவின் பொருளாதாரம் கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 9.2 சதவிகிதம் வளர்ச்சி அடைந்த நிலையில், அம்மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 லட்சத்து 90 கோடி ரூபாயை எட்டி முதலிடத்தை பிடித்துள்ளது.

இராண்டவது இடத்தில் இருக்கும் தமிழ்நாடு கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 8.2 சதவிகிதம் வளர்ச்சி அடைந்து, மொத்த உள்நாட்டு உற்பத்தி 15 லட்சத்து 70 கோடி ரூபாயாக உள்ளது. தமிழ்நாட்டை தொடர்ந்து 8% வளர்ச்சி அடைந்து ராஜஸ்தான் மூன்றாவது இடத்தில் உள்ளது.

விளம்பரம்

Also Read :
எலான் மஸ்க் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பா? – ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வெங்கட் பிரபுவின் பதிவு!

இந்தப் பட்டியலில் 7.5 சதவிகிதத்துடன் ஐந்தாம் இடத்தில் உ.பி.யும், 7.4 சதவிகிதத்துடன் ஆந்திரா ஏழாம் இடத்திலும், 6.6 சதவிகிதத்துடன் கர்நாடகா எட்டாது இடத்திலும் உள்ளன.

தேசிய மொத்த உற்பத்தி 8.2% சதவிகிதமாக இருக்கும் நிலையில், தமிழ்நாடு அதே அளவை பெற்று இரண்டாம் இடத்திலும், தெலுங்கானா தேசிய சராசரியைவிட 1% கூடுதலாக பெற்று முதலிடத்திலும் இருப்பது கவனம் பெற்றுள்ளது.

விளம்பரம்

குறிப்பாக இந்த அறிக்கையில், நாடு முழுவதும் சேவை துறையின் பங்களிப்பால், GVA எனப்படும் மொத்த மதிப்பு கூட்டல் அதிகரித்து, மாநிலங்களின் பொருளாதாரம் முன்னேறி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்த மதிப்பு கூட்டலில் 52 விழுக்காடு உள்ள சேவைத் துறை 9 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளது என அந்த அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. அதே போல், தமிழ்நாட்டில் விவசாயம், கட்டுமானம், ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளின் வளர்ச்சியால், மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி அதிகரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
GDP
,
Tamilnadu
,
uttar pradesh

You may also like

© RajTamil Network – 2024