லண்டனில் அண்ணாமலை.. டெல்லியில் அமித் ஷா – எச்.ராஜா சந்திப்பு.. தமிழக பாஜகவில் என்ன நடக்கிறது?
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா-வை தமிழ்நாடு பாஜக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் எச்.ராஜா சந்தித்துப் பேசினார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, உயர்படிப்புக்காக லண்டன் சென்றுள்ள நிலையில், கட்சியை நிர்வகிக்க எச்.ராஜா தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை எச்.ராஜா அண்மையில் சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில், டெல்லி சென்ற எச்.ராஜா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா-வை இன்று காலை சந்தித்தார். அப்போது, தமிழ்நாடு அரசியல் நிலவரம் குறித்தும், பாஜக வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை இன்று மாலை சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார்.
விளம்பரம்
இந்நிலையில், டெல்லியில் அமித் ஷா-வை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்துப் பேசினார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
- Telegram
- Follow us onFollow us on google news
.Tags:
delhi