Friday, September 20, 2024

தென் ஆப்பிரிக்கா மோசமான பேட்டிங்: வங்காளதேசம் வெற்றிபெற எளிய இலக்கு

by rajtamil
Published: Updated: 0 comment 27 views
A+A-
Reset

டி20 உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்காவின் மோசமான பேட்டிங்கால் வங்காளதேசத்திற்கு எளிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன்,

டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில், நியூயார்க்கில் இன்று நடைபெற்றுவரும் 21வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா – வங்காளதேசம் மோதி வருகின்றன.

இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

இதையடுத்து, தென் ஆப்பிரிக்கா தொடக்க வீரர்களாக குயின்டன் டிகாக், ஹெண்ட்ரிக்ஸ் களமிறங்கினர். ஹெண்ட்ரிக்ஸ் தான் சந்தித்த முதல்பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் (0) எல்பிடபுள்யூ முறையில் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். மற்றொரு தொடக்க வீரர் குயின்டன் டிகாக் 11 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

அடுத்துவந்த மார்க்ரம் 4 ரன்னிலும், ஸ்டப்ஸ் ரன் எதுவும் எடுக்காமலும் (0) அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். பின்னர், 5வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஹெண்ட்ரிச் கிளாசன், டேவிட் மில்லர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

17.3 ஓவர் தென் ஆப்பிரிக்கா 102 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கிளாசன் அவுட் ஆனார். அவர் 44 பந்துகளில் 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தஷ்கின் அகமது பந்து வீச்சில் அவுட் ஆனார். 38 பந்துகளை சந்தித்த டேவிட் மில்லர் 29 ரன்கள் எடுத்த நிலையில் ரஷீத் ஹசன் பந்து வீச்சில் அவுட் ஆனார்.

இறுதியில் தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் வங்காளதேசம் களமிறங்க உள்ளது.

You may also like

© RajTamil Network – 2024