Tuesday, September 24, 2024

மண்டையோட்டை திறக்காமலேயே கண்ணில் இருந்த மூளைக் கட்டியை அகற்றிய டாக்டர்

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

மண்டையோட்டைத் திறக்காமலேயே கண்ணில் இருந்த மூளைக் கட்டியை அகற்றிய நரம்பியல் நிபுணர்கள்நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்,

நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்,

ஹைதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சைக் குழு, 54 வயது பெண் நோயாளியின் சிக்கலான மூளைக் கட்டியை, நோயாளியின் மண்டை ஓட்டைத் திறக்காமலேயே வெற்றிகரமாக அகற்றினர். எண்டோஸ்கோபிக் லேட்டரல் டிரான்ஸ்ஆர்பிட்டல் அப்ரோச்" என்ற சிகிச்சையானது, நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், நியூரோ எண்டோஸ்கோப்பைப் பயன்படுத்தி கண்ணைச் சுற்றி சிறிய, கவனமாக உருவாக்கப்பட்ட பாதையின் மூலம் சில மூளைப் பகுதிகளை அடைந்து சிகிச்சை அளிக்கும் ஒரு வழியாகும்.

மருத்துவர்களின் கூற்றுப்படி, 54 வயதான பெண் நோயாளிக்கு கடந்த ஆறு மாதங்களாக வலது பக்க பார்வையில் மங்கல் மற்றும் தலைவலி இருப்பதாக மருத்துவரிடம் கூறியிருந்தார். இதற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும், எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்ததால், அவருக்கு வைரஸ் என்செபாலிடிஸ் என்ற சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், அவர் AIG மருத்துவமனைக்கு சென்றார். அங்கிருந்த மருத்துவர்கள் அவரை பரிசோதித்தபோது, அவர் ஸ்பெனோ-ஆர்பிட்டல் கேவர்னஸ் மெனிங்கியோமா (SOM) என்ற நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

விளம்பரம்

இந்த கட்டியானது ஸ்பெனாய்டு போன், அதாவது மண்டை ஓட்டின் அடிப்பகுதியில், கண்களுக்குப் பின்னால் அமைந்துள்ளது. மேலும், ஐ சாக்கெட் மற்றும் காவெர்னஸ் சைனஸ் (மண்டை ஓட்டின் அடிப்பகுதியில் அமைந்துள்ள ஒரு பெரிய நரம்பு) சந்திக்கும் பகுதியில் உருவாகி இருந்தது.

இதுகுறித்து விளக்கிய AIG மருத்துவமனைகளின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும் , மூத்த ஆலோசகருமான டாக்டர் அபிராம சந்திர கப்பிடா, எங்கள் நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் கண் மருத்துவக் குழுவுடன் பலமுறை விவாதித்ததில் ஈடுபட்டதை அடுத்து, நோயாளியின் மண்டை ஓட்டை திறக்காமலேயே, மூளைக் கட்டியை அகற்றுவதற்கான ஒரு புதிய முறையை நாங்கள் கண்டறிந்தோம்.

விளம்பரம்

இதையும் வாசிக்க : நாலு பக்கமும் சூரியகாந்தி பூ… அருமையான செல்ஃபி ஸ்பாட்.. எங்கு இருக்கு தெரியுமா ?

மேலும், இந்த அறுவை சிகிச்சையை நாங்கள் வெற்றிகரமாக செய்து முடித்து விட்டோம் என்றும், நரம்பியல் அறுவை சிகிச்சையில் ஒரு புதிய முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளோம் என்றும் கூறுவது உண்மையிலேயே எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார். ஏஐஜி மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை இயக்குனர் டாக்டர் சுபோத் ராஜு கூறியதாவது, எண்டோஸ்கோபிக் செயல்முறையானது ஒரு சிறிய கீறல் மூலம் கட்டியை அணுக அனுமதிக்கிறது, மேலும் இந்த செயல்முறையின் போது, மூளையை நேரடியாக தொடப்படாமல் அல்லது சுருக்கப்படாமல் இருப்பதால், உடல் ரீதியாக எந்த பாதிப்பும் ஏற்படாது. மேலும், இது விரைவாக குணப்படுத்தும் செயல்முறை ஆகும்.

விளம்பரம்

முக்கியமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நோயாளி, குணமடைந்து 2 வது நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு எந்தவித காயமும் இல்லாமல் அவர் இயல்பு நிலைக்கு திரும்பினார் என்று கூறியுள்ளார். இந்த செயல்முறையின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், பெரிய கீறல்கள், தசைகளை வெட்டுதல், மண்டை ஓட்டை வெட்டுதல் போன்றவற்றை செய்வதிலிருந்து முன்னுதாரணமாக திகழ்கிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
doctor
,
government doctors

You may also like

© RajTamil Network – 2024