Friday, September 20, 2024

ஹரியானா சட்டமன்ற தேர்தல்… பிரதமர் மோடி தீவிர ஆலோசனை!

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

ஹரியானா சட்டமன்ற தேர்தல்… பாஜக வேட்பாளர் பட்டியல் குறித்து பிரதமர் மோடி தீவிர ஆலோசனை!ஹரியானா சட்டமன்ற தேர்தல்... பாஜக வேட்பாளர் பட்டியல் குறித்து பிரதமர் மோடி தீவிர ஆலோசனை!

ஹரியானாவில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

ஹரியானாவில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாஜக மத்திய தேர்தல் குழு, டெல்லியில் ஆலோசனை நடத்தியது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, ஹரியானா முதலமைச்சர் நயப் சிங் சைனி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் வேட்பாளர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஓரிரு நாட்களில் வேட்பாளர்களின் பெயர்கள் இறுதி செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது எம்எல்ஏக்களாக உள்ளவர்களில் சிலருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

விளம்பரம்

இதையும் படிக்க:
7 குழந்தைகள் உட்பட 8 பேரை கடித்தே கொன்ற ஓநாய்… உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம், விவசாயிகளின் பிரச்சனை உள்ளிட்ட அம்சங்களால் அங்கு நன்கு அறிமுகமான விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு தருவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 90 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட ஹரியானா சட்டமன்றத்துக்கு வரும் அக்டோபர் 1ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
BJP
,
Narendra Modi
,
PM Modi

You may also like

© RajTamil Network – 2024