Sunday, September 22, 2024

செப்டம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என தெரியுமா?

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset

September 2024 | செப்டம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என தெரியுமா? – லிஸ்ட் இதோ!September 2024 | செப்டம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என தெரியுமா? - லிஸ்ட் இதோ!

செப்டம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்பது குறித்து பார்க்கலாம்.

எந்த மாணவரிடம் கேட்டாலும் விடுமுறை நாட்கள் குறித்து அவ்வளவு ரசித்து கூறுவார்கள். ஏனென்றால், பள்ளிக்கு செல்லும் நாட்களில் செய்ய முடியாததை அவர்கள் விடுமுறை நாட்களில் மட்டுமே செய்ய முடியும். அதனால் விடுமுறை என சொன்னாலே மாணவர்கள் உற்சாகமாகி விடுகின்றனர்.

விடுமுறை குறித்து பேசுகையில், பள்ளி மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தேசிய விடுமுறை தினங்கள் கடைபிடிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, மற்ற பள்ளிகளுக்கு பொது விடுமுறையும் கடைப்பிடிக்கப்படுகிறது.

விளம்பரம்

Also Read:
மலையாள திரையுலகில் விஸ்வரூபம் எடுத்துள்ள நடிகைகளின் பாலியல் புகார்கள்… பாஜகவின் நிலைப்பாடு என்ன?

செப்டம்பர் என்பது பல்வேறு பண்டிகைகள் மற்றும் விடுமுறைகள் நிறைந்த மாதம். நாடு, பிராந்தியம் மற்றும் கல்வி நிறுவனத்தை பொறுத்து பள்ளி விடுமுறைகள் வேறுபடுகின்றன. அவை பொதுவாக கல்வி நாட்காட்டியின் அடிப்படையில் திட்டமிடப்பட்டு ஆண்டு முழுவதும் பல்வேறு இடைவெளிகளை உள்ளடக்கி இருக்கும்.

இந்நிலையில் செப்டம்பர் மாதத்தில்,
விநாயகர் சதுர்த்தி மற்றும் ஓணம் பண்டிகை நெருங்கி வருவதால், விடுமுறை குறித்து மாணவர்கள் உற்சாகமாக உள்ளனர். விடுமுறை பட்டியல் மற்றும் நாட்களின் எண்ணிக்கை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். செப்டம்பர் 2024ம் ஆண்டுக்கான பள்ளி விடுமுறைகளின் பட்டியலைப் பார்க்கவும்.

விளம்பரம்

செப்டம்பர் 7, 2024 விநாயகர் சதுர்த்தி
செப்டம்பர் 5, 2024 ஓணம்
செப்டம்பர் 15, 2024 திருவோணம்
செப்டம்பர் 16 , 2024 மிலாடி நபி

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி என்பது விநாயகப் பெருமானின் பிறப்பைக் கொண்டாடும் இந்து பண்டிகையாகும். இந்த மகிழ்ச்சியான நிகழ்வை இந்தியா முழுவதிலும், உலகெங்கிலும் உள்ள ஏராளமான மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.

திருவோணம்

அதேபோல், கேரளாவில் திருவோணம் என்பது முக்கிய பண்டிகையாகும். திருவோணத்தை கேரள மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள். கதகளி, மோகினியாட்டம் போன்ற பாரம்பரிய நடனங்கள் மற்றும் பல போட்டிகளும் நடத்தி மகிழ்வர்.

மண் பானை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்.!
மேலும் செய்திகள்…

மிலாடி நபி

இறை தூதரான மிலாடி நபியின் பிறந்த நாளையே மிலாடி நபியாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் மிலாடி நபியை முன்னிட்டு பெரும்பாலான மாநிலங்களில் பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும், மிலாடி நபி அன்று இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்துவார்கள்.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
School Leave
,
Vinayagar Chathurthi

You may also like

© RajTamil Network – 2024