Friday, September 20, 2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: விழுப்புரத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்

by rajtamil
Published: Updated: 0 comment 36 views
A+A-
Reset

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

சென்னை,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி மரணம் அடைந்தார். எனவே நாடாளுமன்ற தேர்தலுடன் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் நடைபெறவில்லை.

இந்த நிலையில், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகின்ற 14-ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய 21-ம் தேதி கடைசி நாள் ஆகும்.

இடைத்தேர்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்திற்கு புதிய திட்டங்கள் அறிவிக்க கூடாது என்றும் கூறியுள்ள அவர், ஏற்கனவே செயல்படுத்தி வரும் திட்டங்களுக்கு தடை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024