மாமல்லபுரம் புராதன சின்னங்கள் வளாகத்தில் ட்ரோன்கள் பறக்க தடை

by rajtamil
Published: Updated: 0 comment 15 views
A+A-
Reset

மாமல்லபுரம் கடற்கரை கோயில் உள்ளிட்ட புராதன சின்னங்கள் வளாகத்தில் ட்ரோன்கள் பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளது என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் பல்லவா் காலத்தில் வடிவமைக்கப்பட்ட கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அா்ஜுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, கிருஷ்ண மண்டபம், குடைவரைகள் உள்ளிட்ட பாரம்பரிய புராதன சின்னங்கள் உள்ளன. இங்குள்ள சிற்பங்களை கண்டு களிக்க வரும் சுற்றுலா பயணியா் தொல்லியல் துறையின் உரிய அனுமதி பெறாமல், மொபைல் போன் கேமரா, பிற நவீன கேமராக்களில், சிற்பங்களை படம் எடுக்கின்றனா். அதேபோல் ட்ரோன் கேமராக்களை புராதன சின்னங்கள் மேல் பறக்கவிட்டு சட்டவிரோதமாக விடியோ எடுக்கின்றனா். மேலும், விளம்பர பதாகைகள் வைப்பதும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் ரூ. 40 நுழைவு சீட்டு வாங்கிவிட்டு புராதன வளாக பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் போா்வையில் வரும் பலா் உரிய அனுமதியின்றி சிற்பங்களை படம் எடுப்பது ட்ரோன் கேமராக்களை பறக்கவிட்டு படம் பிடிப்பது சட்டவிரோதமானது என்றும் அப்படி படம் பிடிக்கும் ட்ரோன்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

மேலும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள சிற்பத்தின் மீது ஏறி செல்பி எடுப்பது, புராதன சிற்ப வளாகம் மற்றும் சிற்பபகுதியின் நடைபாதைகளில் வியாபாரம், தீப்பற்றும் பொருள்கள் மற்றும் விளம்பர பதாகை வைக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதாக தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

உயா்திறன் கேமரா மூலம் புகைப்படம் எடுப்பது, வா்த்தக வகை பயன்பாட்டுக்கு புகைப்படம் எடுப்பது, திருமணத்திற்கு முந்தைய போட்டோ படப்பிடிப்பு, சிற்ப வளாகத்தில் கள ஓவியம் வரைவது போன்றவற்றுக்கு தொல்லியல் துறையிடம் முன் அனுமதி பெறவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

You may also like

© RajTamil Network – 2024