மின்சார வாகன பேட்டரி தயாரிப்பில் களமிறங்கும் ரிலையன்ஸ்!

by rajtamil
Published: Updated: 0 comment 4 views
A+A-
Reset

பெங்களூரு: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மின்சார வாகன பேட்டரி உற்பத்தியை ஆதரிக்கும் ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் ஏலத்தை வென்றுள்ளது என்று மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், அரசு உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், மேம்பட்ட பேட்டரி செல்களின் உள்ளூர் உற்பத்தி அலகுகளை அமைக்க ஏழு நிறுவனங்கள் ஏலங்களை சமர்ப்பித்ததில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஏலத்தை வென்றுள்ளது.

கரடியின் ஆதிக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவு!

ஆயில்-டு-டெலிகாம் குழுமமானது பேட்டரி தயாரிப்பாளரான அமர ராஜா எனர்ஜி, ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி உள்ளிட்ட மற்ற போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ளியுள்ள நிலையில், மேம்பட்ட வேதியியல் செல்களை தயாரிப்பில் களமிறங்கியுள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மின்சார வாகனங்களின் வளர்ச்சிக்கு ஊக்குவிக்கும் என தெரியவந்துள்ளது.

அதிகபட்சமாக ரூ.3,600 கோடி முதலீட்டில் வரும் இந்த திட்டமானது பேட்டரிகளின் உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமானது 10 ஜிகாவாட் மேம்பட்ட வேதியியல் பேட்டரிகளை உருவாக்க முடியும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இந்தியாவில் மொத்த கார் விற்பனையில் மின்சார கார் மாடலானது சுமார் 2 சதவிகிதமாக இருந்த நிலையில், 2030-க்குள் அதை 30 சதவிகிதமாக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு விருகிறது.

You may also like

© RajTamil Network – 2024