Tuesday, September 24, 2024

வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது: தமிழகத்தில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது: தமிழகத்தில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்குவங்கக்கடல் பகுதிகளில் இன்று (செப்.5)காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புஉள்ளது. தவிர, வடக்கு ஆந்திரா, அதை ஒட்டியகடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 6 முதல் 10-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றுவானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூர், சென்னை மணலியில் 4 செ.மீ.,சென்னை திருவொற்றியூர், ஆவடி, கத்திவாக்கம், மதுரவாயல், வானகரம், அண்ணா நகர்,ராயபுரம், திருவள்ளூர், சோழவரம், பூண்டி,தாமரைப்பாக்கம், புதுச்சேரி பாகூர், நாகைமாவட்டம் வேளாங்கண்ணி, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் 3 செ.மீ. மழைபதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

You may also like

© RajTamil Network – 2024