Saturday, September 21, 2024

இலாகா ஒதுக்கீடு: பிரதமர் மோடி வகிக்கும் துறைகள்

by rajtamil
Published: Updated: 0 comment 20 views
A+A-
Reset

டெல்லி,

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதையடுத்து, தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவர் மத்தியில் ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதையடுத்து, மோடியை ஆட்சியமைக்க ஜனாதிபதி திரவுபதி முர்மு அழைப்பு விடுத்தார்.

அதன்படி, ஜனாதிபதி மாளிகையில் நேற்று பதவியேற்பு விழா நடைபெற்றது. அதில், மோடி 3-வது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்றார். ஜனாதிபதி திரவுபதி முர்மு, மோடிக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அவருடன் 71 மத்திய மந்திரிகள் பதவியேற்றுக்கொண்டனர்.

இதனிடையே, பா.ஜ.க. அரசில் பதவியேற்ற மத்திய மந்திரிகள் யாருக்கு எந்த இலாகா ஒதுக்கப்படும் என்பதில் பரபரப்பு நீடித்து வந்தது. இந்த நிலையில், அந்த பரபரப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அமித்ஷா, ஜெய்சங்கர், ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட சில மந்திரிகள் ஏற்கெனவே வகித்த துறையை மீண்டும் ஏற்றுள்ளனர். சிலருக்கு இலாகா மாற்றப்பட்டு புதிய இலாகா வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி மத்திய பணியாளர் நலன், அணுசக்தி துறை, விண்வெளி துறை ஆகிய துறைகளை மீண்டும் தன்வசமே வைத்துக் கொண்டார். மேலும், முக்கிய கொள்கை விவகாரம் மற்றும் ஒதுக்கப்படாத துறைகளை பிரதமர் மோடியே கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

#BREAKING | மத்திய பணியாளர் நலன், அணுசக்தி துறை, விண்வெளி துறை ஆகியவற்றை மீண்டும் தன்வசமே வைத்துக் கொண்டார் பிரதமர் மோடி
முக்கிய கொள்கை விவகாரம் மற்றும் ஒதுக்கப்படாத துறைகளை பிரதமர் மோடியே கவனிப்பார்#ModiCabinet#NarendraModi#NDA#BJP#ThanthiTVpic.twitter.com/3lxHYi3rCB

— Thanthi TV (@ThanthiTV) June 10, 2024

You may also like

© RajTamil Network – 2024