Friday, September 20, 2024

விஜய்யின் ‘தி கோட்’ வெளியீடு: முதலில் வாழ்த்திய அஜித்

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஜய் நடித்துள்ள 'தி கோட்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது

சென்னை,

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் , 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்) படத்தில் நடித்துள்ளார். விஜ்ய்யுடன், பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர்.ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். டிஏஜிங் தொழில்நுட்பம் மூலம் விஜய் இளம் வயதில் தோன்றும் காட்சிகள் இருப்பதால் இப்படத்தின் மீது பெரியளவில் எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஜய் நடித்துள்ள 'தி கோட்' திரைப்படம் உலகம் முழுவதும் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், கோட் திரைப்படம் வெற்றியடைய நடிகர் அஜித் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெங்கட் பிரபு வெளியிட்டுள்ள தனது எக்ஸ் தள பதிவில்

நன்றி தல அஜித் . விஜய் அண்ணாவுக்கு, எனக்கு மற்றும் 'கோட்' படக் குழுவினருக்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்ததற்கு.. நாங்கள் அனைவரும் உங்களை நேசிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

Original Article

You may also like

© RajTamil Network – 2024