Tuesday, September 24, 2024

நமது பாடத்திட்டம் குறித்து ஆளுநருக்கு என்ன தெரியும்? – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

நாட்டிலேயே சிறந்த கல்வி என்றால் அது தமிழ்நாட்டு கல்விதான் என்பதை பலமுறை நம் மாணவர்கள் நிரூபித்திருக்கும் நிலையில், சிலர் வயிற்றெரிச்சலில் தமிழ்நாட்டு பள்ளி பாடத்திட்டம் சரியில்லை என்று அவதூறு கிளப்புகிறார்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கருத்துக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. அண்மையில் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட உயர்கல்வி நிலையங்களின் தரவரிசை பட்டியலில், முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் 22 பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்துள்ளன.

முதல் 50 அரசு பல்கலைக்கழகங்கள் பட்டியலில் தமிழ்நாடு அரசின் அண்ணா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகம் ஆகிய 10 பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்துள்ளன. அதிலும், இந்தியாவிலேயே முதல் மாநில பல்கலைக்கழகம் என்ற பெருமையைப் அண்ணா பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.

இப்படி தொடக்க கல்வி முதல் உயர்கல்வி வரை கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்கி வருகிறது. இதனால்தான் மத்திய அரசின் குலக்கல்வியை போதிக்கும் தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது. மேலும் இருமொழி கொள்கையிலும் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது.

இதை பொறுத்துக் கொள்ள முடியாத மத்திய அரசு கல்விக்கு தரவேண்டிய நிதியை கொடுக்காமல் நிறுத்திவைத்துள்ளது. தற்போது ஆளுநரை வைத்து மாநில அரசின் பாடத்திட்டத்தை விமர்சிக்க தொடங்கி உள்ளது.

தமிழ்நாட்டில் ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவி, தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும்போது, மாநில பாடத்திட்டங்கள் தரம் மோசமாக உள்ளது என பேசியுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பும் கண்டனங்களும் எழுந்து வருகிறது.

இந்த நிலையில், உலகின் தலைசிறந்த மருத்துவர்கள் தமிழ்நாட்டில் படித்தவர்கள்தான். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு சிலர் வயிற்றெரிச்சலில் தமிழ்நாட்டு கல்வியை பார்த்தும், பள்ளி பாடத்திட்டத்தை குறை கூறிக்கொண்டு அவதூறு கிளப்புகிறார்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ரூ.21,700 சம்பளத்தில் உச்ச நீதிமன்றத்தில் சமையல் உதவியாளர் வேலை: 80 காலியிடங்கள்

சென்னையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டின் பள்ளி பாடத்திட்டம் சரி இல்லை என்று சிலர் அவதூறு கிளப்புகிறார்கள்.

மாணவர்களை சுயமாக சிந்திக்க தூண்டுகிற கல்வி முறைதான் சிறந்த கல்வி முறை. அந்த வகையில் நாட்டிலேயே நமது கல்விமுறைதான் மாணவர்களை சிந்திக்க வைக்கின்ற எதையும் ஏன்?, எதற்கு?, எப்படி? என்று கேள்வி கேட்கும் கல்வி முறையாக அமைந்துள்ளது.

உலகின் தலைசிறந்த மருத்துவர்கள் அரசு பள்ளியில் படித்தவர்கள்தான். இதைப்பிடிக்காத வயிற்றெரிச்சல் பிடித்தவர்கள்தான் இன்று தமிழ்நாட்டின் பாடத்திட்டம் குறித்து குறை சொல்கிறார்கள்.

அரசுப் பள்ளியில் பயின்ற மயில்சாமி அண்ணாதுரை, வீரமுத்துவேல் ஆகியோர் இஸ்ரோ விஞ்ஞானிகளாகி இருக்கிறார்கள்.

நமது பாடத்திட்டத்தில் படித்த பலரும் ஐஐடி, எம்ஐடி போன்ற உயர்கல்வி நிலையங்களில் படித்து வருகின்றனர்.

நமது பாடத்திட்டத்தை குறை சொல்வது என்பது மாணவர்களையும், ஆசிரியர்களையும் குறைசொல்வதற்கு சமம். இதற்கு நமது திராவிட மாடல் அரசும், நமது முதல்வரும் எந்தகாலத்திலும் இடம் கொடுக்க மாட்டார்கள்.

மேலும் நமது பாடத்திட்டம் குறித்து ஆளுநர் ஆர்.என். ரவிக்கு என்ன தெரியும்? என கேள்வி எழுப்பிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாட்டிலேயே சிறந்த கல்வி என்றால் அது தமிழ்நாட்டு கல்விதான் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024