Tuesday, September 24, 2024

பிக்பாஸ் – 8 தொகுப்பாளர் விஜய் சேதுபதி!

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

பிக்பாஸ் – 8 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. கடந்த 7 சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

ஆனால், சில மாதங்களுக்கு முன் பிக்பாஸ் – 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவதில்லை என அவர் அறிவித்ததைத் தொடர்ந்து, அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபலம் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவியது.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி பிக்பாஸ் – 8 சீசனை தொகுத்து வழங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது, நிகழ்ச்சி பார்வையாளர்களிடம் ஆவலை ஏற்படுத்தியுள்ளது. விரைவில், போட்டியாளர்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Excited to announce that I'll be hosting Big Boss! Join me on this thrilling journey! #VJStheBBhost@vijaytelevision@disneyplusHSTam#BiggBossTamilSeason8#BiggBossTamil#BBT#BBTamilSeason8#பிக்பாஸ்#VijayTelevision#Disneyplushotstartamil#VijayTVpic.twitter.com/e2XcYn99J4

— VijaySethupathi (@VijaySethuOffl) September 4, 2024

You may also like

© RajTamil Network – 2024