Tuesday, September 24, 2024

உள்ளூர் போட்டிகளில் விளையாடுவது மிகவும் முக்கியம்: ரிஷப் பந்த்

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

உள்ளூர் போட்டிகளில் விளையாடுவது மிகவும் முக்கியம் என இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.

துலிப் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று (செப்டம்பர் 5) முதல் தொடங்கியுள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ரிஷப் பந்த் துலிப் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா பி அணிக்காக விளையாடுகிறார்.

கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்குப் பிறகு, ரிஷப் பந்த் சிவப்பு பந்து போட்டியில் விளையாடவுள்ளார். அவர் கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார்.

காதலனால் தீவைத்து எரிக்கப்பட்ட ஒலிம்பிக் வீராங்கனை உயிரிழப்பு!

உள்ளூர் போட்டிகள் மிக முக்கியம்

உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது மிகவும் முக்கியம் என ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: துலிப் கோப்பையில் விளையாடவுள்ளது சிறப்பான உணர்வைக் கொடுப்பதாக நினைக்கிறேன். ஏனெனில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கார் விபத்தில் சிக்கிய பிறகு, எப்போது இந்திய அணிக்காக விளையாடப் போகிறேன் என்று அடிக்கடி யோசிப்பேன். கடந்த 6 மாதங்களில் ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ளேன். இந்திய அணிக்காக விளையாடி உலகக் கோப்பையும் வென்றுள்ளோம். உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பது சிறுவயதிலிந்தே எனது ஆசையாக இருந்து வந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு துலிப் கோப்பையில் விளையாடவுள்ளேன்.

உள்ளூர் போட்டிகளில் விளையாடுவது என்பது மிகவும் முக்கியம். அதிலும் குறிப்பாக துலிப் கோப்பை போன்ற தொடர்களில் விளையாடுவது மிகவும் முக்கியம். ஒரு கிரிக்கெட்டராக அதிகப் படியான பயிற்சிகள் தேவைப்படும். உள்ளூர் போட்டிகளில் மூத்த வீரர்கள் விளையாடும்போது, இளம் வீரர்கள் அவர்களிடத்திலிருந்து நிறைய கற்றுக் கொள்ள முடியும். அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் விளையாடும் இளம் வீரர்களுக்கு புதிய உத்வேகம் கிடைக்கும்.

பாலன் டி’ஓர் விருது பட்டியலில் மெஸ்ஸி, ரொனால்டோ பெயர் இல்லாததால் ரசிகர்கள் அதிர்ச்சி!

டெஸ்ட் அணியில் மீண்டும் இணைய ஆர்வம்

கார் விபத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடாமல் இருந்த ரிஷப் பந்த், கடந்த 6 மாதங்களாக கிரிக்கெட் விளையாடி வருகிறார். கடந்த 2022 ஆம் ஆண்டின் இறுதியில் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் கடைசியாக விளையாடிய ரிஷப் பந்த், மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்கும் ஆர்வத்தில் உள்ளார்.

இந்திய அணி அதன் சொந்த மண்ணில் வங்கதேசத்துக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்க ரிஷப் பந்த் ஆர்வமாக உள்ளார். துலிப் கோப்பைத் தொடரில் ரிஷப் பந்த் சிறப்பாக செயல்படும் பட்சத்தில், வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

துலிப் டிராபி: இந்தியா டி அணி திணறல்!

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற செப்டம்பர் 19 முதல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024