Tuesday, September 24, 2024

வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

வங்கக்கடலில் நிலவிவந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வடக்கு ஆந்திரம் – தெற்கு ஒரிசா கடற்கரை பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுதத நாள்களில் வடக்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும்.

இன்றும், நாளையும் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செப்.11 வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

ஜாதகத்தில் கர்மாவின் தாக்கங்கள் எவ்வாறு தெரிந்துகொள்ளலாம்?

சென்னை மற்றும் புறநகர் வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

டான் பட இயக்குநர் சிபி சக்ரவர்த்திக்கு திருமணம்!

மீனவர்கள்..

செப்.5 வரை மன்னார் வளைகுடா தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

You may also like

© RajTamil Network – 2024