Friday, September 20, 2024

ரயில்வே பணியை ராஜினாமா செய்தார் வினேஷ் போகத்

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

ஹரியானா தேர்தலில் போட்டி? – ரயில்வே பணியை ராஜினாமா செய்தார் வினேஷ் போகத்ஹரியானா தேர்தலில் போட்டி? - ரயில்வே பணியை ராஜினாமா செய்தார் வினேஷ் போகத்

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மற்றும் வீரர் பஜ்ரங் புனியா காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள நிலையில் தங்களது ரயில்வே பணியை ராஜினாமா செய்தனர்.

ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தல் அக்டோபர் 5-ம் தேதி நடைபெறவுள்ளது. ஹரியானாவில் தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜகவை அகற்றிவிட்டு ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் முயற்சி மேற்கொண்டு வருகிறது. காங்கிரஸ் இம்முறை ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கலாம் எனக் கூறப்படுகிறது. விரைவில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது.

விளம்பரம்

இந்நிலையில் ஹரியானாவைச் சேர்ந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மற்றும் வீரர் பஜ்ரங் புனியா இருவரும் காங்கிரஸ் கட்சியில் இணையலாம் என்று தகவல் வெளியானது. இருவரும் ராகுல் காந்தியை சந்தித்தும் பேசியிருந்தனர். தொடர்ந்து வினேஷ் போகத், பஜ்ரங் புனியா இருவரும், இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கே.சி வேணுகோபாலை சந்தித்தனர்.

தொடர்ந்து இருவரும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். கே.சி வேணுகோபால் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர்களை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் வரவேற்றனர். இதற்கிடையே, வினேஷ் போகத் தனது ரயில்வே பணியை ராஜினாமா செய்துள்ளார்.

விளம்பரம்

Also Read:
அரசுப் பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவா? – இணையத்தில் கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்!

வடக்கு ரயில்வேயில் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார் வினேஷ் போகத். அந்தப் பணியைத் தான் தற்போது ராஜினாமா செய்துள்ளதாக தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

எக்ஸ் தள பதிவில், “இந்திய ரயில்வேயில் சேவை செய்தது என் வாழ்வில் மறக்க முடியாத மற்றும் பெருமையான தருணம். என் வாழ்க்கையின் இந்த கட்டத்தில், ரயில்வே சேவையிலிருந்து ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளேன். எனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளேன். தேசத்துக்கான சேவையில் ரயில்வே எனக்கு வழங்கிய இந்த வாய்ப்பிற்காக இந்திய ரயில்வே குடும்பத்திற்கு நான் எப்போதும் நன்றியுள்ளவளாக இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார். இதேபோல், பஜ்ரங் புனியாவும் தனது ரயில்வே பணியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Congress
,
haryana
,
Railway
,
Vinesh Phogat

You may also like

© RajTamil Network – 2024