Friday, September 20, 2024

திருமணம் நடந்த சில மணி நேரத்தில் புதுமாப்பிள்ளை ‘திடீர்’ உயிரிழப்பு: 2-வது கணவரையும் பறிகொடுத்த மணமகள்

by rajtamil
0 comment 28 views
A+A-
Reset

மணமக்கள் இருவரும் ஒரு அறையில் இருந்தனர்.

சென்னை,

சென்னை பெரவள்ளூர் கே.சி.கார்டன் 6-வது தெருவைச் சேர்ந்தவர் லோகேஷ் (வயது 40). என்ஜினீயரான இவர், சோழிங்கநல்லூரில் உள்ள பிரபல ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை இவருக்கும், திருச்சியை சேர்ந்த ராஜலட்சுமி(36) என்ற பெண்ணுக்கும் திருப்போரூர் முருகன் கோவிலில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. பின்னர் மணமக்கள் மற்றும் உறவினர்கள், பெரவள்ளூரில் உள்ள மணமகன் லோகேஷ் வீட்டுக்கு வந்தனர்.

மணமக்கள் இருவரும் ஒரு அறையில் இருந்தனர். அப்போது லோகேஷ் திடீரென வாய் மற்றும் மூக்கில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனால் மணமகள் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே லோகேஷ் சாவுக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

மணமகள் ராஜலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, அவரது முதல் கணவர் கொரோனா காலத்தில் உடல் நலமின்றி உயிரிழந்தார். இந்தநிலையில்தான் லோகேசை 2-வதாக திருமணம் செய்தார். ஆனால் திருமணம் நடந்த அன்றே 2-வது கணவரையும் அவர் பறி கொடுத்த சம்பவம் அவரது உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.

You may also like

© RajTamil Network – 2024