டி20 கிரிக்கெட்: வெறும் 5 பந்துகளிலேயே வெற்றி பெற்ற அணி

by rajtamil
0 comment 24 views
A+A-
Reset

2026 டி20 உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

பாங்கி,

அடுத்த ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்தத் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

அதன்படி ஆசிய மண்டல தகுதி சுற்று மலேசியாவின் பாங்கி நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் சிங்கப்பூர்- மங்கோலியா அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற சிங்கப்பூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, பேட் செய்த மங்கோலியா வீரர்கள், சிங்கப்பூரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். 10 ஓவர்கள் மட்டுமே தாக்கு பிடித்த அந்த அணி 10 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

இதன்மூலம், டி20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த ரன்னுக்கு சுருண்ட அணி என்ற மோசமான சாதனையை மங்கோலியா சமன் செய்துள்ளது. சிங்கப்பூர் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய பரத்வாஜ் 4 ஓவர்களை 3 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதைத் தொடர்ந்து, விளையாடிய சிங்கப்பூர் வெறும் 5 பந்துகளிலேயே ஒரு விக்கெட் இழப்பிற்கு இலக்கை கடந்து அபார வெற்றி பெற்றது.

You may also like

© RajTamil Network – 2024