தில்லி சாலைகளில் இருவேறு இடங்களில் திடீர் பள்ளம்: போக்குவரத்து பாதிப்பு!

by rajtamil
Published: Updated: 0 comment 7 views
A+A-
Reset

புதுதில்லி: ஜனக்புரி மற்றும் கரோல் பாக் பகுதிகளில் உள்ள சாலைகளின் ஒரு பகுதி திடீரென சரிந்ததால், அப்பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தில்லி காவல் துறையினர் இன்று தெரிவித்துள்ளனர்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் தரவுகளை பகிர்ந்து கொண்ட தில்லி காவல் துறையினர், ஜனக்புரி மாவட்டத்தில் ஜோகிந்தர் சிங் மார்க்கில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால், ஜனக்புரி மாவட்ட மையத்திலிருந்து லால் சைன் மந்திர் மார்க் வரையிலான பாதையில் தற்காலிகமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

அதே வேளையில் லால் சைன் மந்திர் மார்க் நோக்கிச் செல்லும் பயணிகள் ஜனக்புரியின் தௌலி பியாவோ சந்திப்பில் மேஜர் தீபக் தியாகி மார்க் வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மற்றொரு பதிவில், கரோல் பாக் மார்க்கெட்டில் உள்ள ஆர்ய சமாஜ் சாலை இணைப்பிலிருந்து சரஸ்வதி செளவுக் நோக்கி செல்லும் பாதையில் பிகானீர் செளவுக் அருகே உள்ள சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எந்தவிதமான விபத்தும் ஏற்படாமல் இருக்க தடுப்புகளை வைத்துள்ளனர் காவல் துறையினர்.

ஆர்யா சமாஜ் சாலையில் உள்ள பகுதி, நீர் கசிவு காரணமாக சரிந்து விட்டதாக பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது விரைவில் சரிசெய்யப்படும் என்றார். இதேபோல் பழைய தில்லி ரயில் நிலையம் அருகிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024