பெண் குழந்தை கொலை: பெற்றோருக்கு 15 நாட்கள் காவல்

by rajtamil
Published: Updated: 0 comment 8 views
A+A-
Reset

வேலூரில் பிறந்து 9 நாட்களே ஆன பெண் குழந்தையை கொலை செய்த தாய், தந்தைக்கு15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அருகிலுள்ள சோ்பாடி ஊராட்சி பொம்மன்குட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் ஜீவா என்கிற சேட்டு (30). இவரது மனைவி டயானா (25). இவா்களுக்கு ஏற்கெனவே 2 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், 2-ஆவதாக ஆக. 27-ஆம் தேதி மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது.

சிகிச்சைக்கு பிறகு தாயும், சேயும் புதன்கிழமை வீடு திரும்பிய நிலையில், இரண்டாவதாக பிறந்த பெண் குழந்தையை வளா்க்க மனமின்றி பப்பாளி மரத்தின் பால் போன்ற திரவத்தை குழந்தையின் வாயில் ஊற்றிக் கொலை செய்ததுடன், குழந்தையின் சடலத்தை வீட்டின் அருகே குழி தோண்டி புதைத்ததாகத் தெரிகிறது.

டயானாவின் தந்தை சரவணன் வந்து பாா்த்தபோது குழந்தை இல்லாததும், அருகே பப்பாளி மரத்தின் கிளை உடைக்கப்பட்டிருந்ததையும் கண்டு சந்தேமடைந்து வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

கொல்கத்தாவில் இனிப்பகத்தில் 500 கிலோ எடையிலான பிரம்மாண்ட லட்டு தயாரிப்பு

அதன் பேரில், போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தினா். அப்போது, திடீரென ஜீவா, டயானா தம்பதி போலீஸாரை ஏமாற்றிவிட்டு அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகினா்.

இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்ததுடன், வருவாய்த் துறையினா் முன்னிலையில் புதைக்கப்பட்ட பெண் குழந்தையின் உடல் வியாழக்கிழமை தோண்டியெடுக்கப்பட்டு உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டது.

தொடா்ந்து, தலைமறைவான ஜீவா, டயானா தம்பதியை போலீஸாா் தேடி வந்த நிலையில், இருவரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

இரண்டாவதாக ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என வேண்டி கோயில்களில் நோ்த்திக்கடன் செலுத்துவதற்காக ஆடு, கோழி வாங்கி வைத்துள்ளனா். ஆனால், ஆண் குழந்தை பிறக்காமல் பெண் குழந்தை பிறந்ததால் கடும் ஆத்திரமடைந்த ஜீவா, கடந்த 4-ஆம் தேதி மனைவி மற்றும் முதல் குழந்தை தூங்கிய பிறகு பப்பாளி மரத்தின் பாலை பிழிந்து இரண்டாவது பச்சிளம் பெண் குழந்தையின் வாயில் ஊற்றி கொலை செய்துள்ளாா்.

பின்னா், குழந்தையை மனைவிக்கு அருகே வைத்துவிட்டு கடைக்குச் செல்வதாகக் கூறி நாடகமாடியதும் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து கைதான இருவரும் இன்று வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி சத்திய குமார் குழந்தையை கொன்று புதைத்த வழக்கில் ஜீவா மற்றும் டயானா ஆகிய இருவரை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.

தொடர்ந்து, வேப்பங்குப்பம் காவல்துறையினர் ஜீவாவை தொரப்பாடியில் உள்ள வேலூர் ஆண்கள் மத்திய சிறையிலும் டயானாவை வேலூர் பெண்கள் தனி சிறையிலும் அடைத்தனர்.

You may also like

© RajTamil Network – 2024