கொல்கத்தாவில் இனிப்பகத்தில் 500 கிலோ எடையிலான பிரம்மாண்ட லட்டு தயாரிப்பு

by rajtamil
Published: Updated: 0 comment 6 views
A+A-
Reset

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கொல்கத்தாவில் உள்ள இனிப்பகத்தில் 500 கிலோ எடையிலான பிரம்மாண்ட லட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகைக்கு அடுத்தபடியாக வெகு விமரிசையாக கொண்டாபடும் நிகழ்வு என்றால் அது விநாயகர் சதுர்த்தி விழா தான். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் மேற்கு வங்கத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மணிப்பூரில் மீண்டும் வன்முறை- 6 பேர் சுட்டுக் கொலை

பக்தர்கள் தங்கள் வீடுகளுக்குள் விநாயகர் சிலைகளை கொண்டு வருதல், விரதம் அனுசரித்தல், பாரம்பரிய பிரசாதம் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரியங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கொல்கத்தாவின் பவானிபூர் பகுதியில் உள்ள இனிப்பகம் ஒன்றில் பிரம்மாண்ட லட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒரு லட்டுவின் எடை மட்டும் 500 கிலோ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கடையின் உரிமையாளர் பிரியங்கா மாலிக் கூறுகையில், "எங்கள் பண்டிகை காலம் விநாயகர் சதுர்த்தியுடன் தொடங்குகிறது. இது எங்களுக்கு மிகவும் புனிதமான நாள். ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது சிறப்பு செய்ய முயற்சி செய்கிறோம். எங்கள் கடை கிட்டத்தட்ட 140 ஆண்டுகள் பழமையானது.

இந்த ஆண்டு, நாங்கள் விநாயகப் பெருமானுக்கு பிரசாதமாக 500 கிலோ லட்டு தயார் செய்துள்ளோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

You may also like

© RajTamil Network – 2024