Friday, September 20, 2024

டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் அணியில் மாற்றம் தேவை – முன்னாள் கேப்டன் அப்ரிடி

by rajtamil
0 comment 18 views
A+A-
Reset

வெற்றிக் கணக்கை தொடங்காத பாகிஸ்தானுக்கு சூப்பர் 8 சுற்று வாய்ப்பு கணிசமாக குறைந்துள்ளது.

நியூயார்க்,

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவிடம் சூப்பர் ஓவரில் தோற்றது. இந்தியாவுக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் 120 ரன் இலக்கை கூட எடுக்க முடியாமல் தோல்வியடைந்தது. இன்னும் வெற்றிக் கணக்கை தொடங்காத பாகிஸ்தானுக்கு சூப்பர் 8 சுற்று வாய்ப்பு கணிசமாக குறைந்துள்ளது. நியூயார்க்கில் இந்திய நேரப்படி இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணிக்கு அரங்கேறும் 22-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, கனடாவை (ஏ பிரிவு) சந்திக்கிறது

இந்த நிலையில், பாகிஸ்தான் அணியில் மாற்றம் தேவை என முன்னாள் கேப்டன் அப்ரிடி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது,

உலகக் கோப்பையில் இனி வரும் ஆட்டங்களுக்கு பாகிஸ்தான் பயிற்சியாளர் கிர்ஸ்டன், கேப்டன் பாபர் அசாம் சில மாற்றங்களை செய்ய வேண்டும். உஸ்மான் கான் இடத்திற்கு சல்மான் அலி ஆஹாவையும், ஷதப் கான் இடத்திற்கு சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவையும் கொண்டு வரவேண்டும். முகமது ரிஸ்வானுடன் தொடக்க ஆட்டக்காரராக பஹர் ஜமானை இறக்கினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். பாபர் அசாம் 3-வது வரிசையில் ஆட வேண்டும்' என்றார்.

You may also like

© RajTamil Network – 2024