Monday, September 23, 2024

ஜம்மு – காஷ்மீர் தேர்தல்: பாஜகவின் 6-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset

ஜம்மு – காஷ்மீர் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் 6-ஆம் கட்ட பட்டியல் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, செப்டம்பா் 18, 25, அக்டோபா் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டமாகப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. அக்டோபா் 8-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

ரஞ்சித், மாரி செல்வராஜ் ஜாதியவாதத்தை உயர்த்திப் பிடிப்பவர்கள் அல்ல: தொல். திருமாவளவன்

கடந்த 2019-இல் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு நடைபெறும் தோ்தல் என்பதால் பெரும் எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது. பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தனித்தும், காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும் களம் காண்கின்றன.

இந்த நிலையில், ஜம்மு – காஷ்மீர் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் 6-ஆம் கட்ட பட்டியல் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. அதில், 10 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, உதம்பூர் கிழக்கில் ஆர்எஸ் பதானியாவும், பந்திபோராவில் நசீர் அகமது லோனும் போட்டியிட உள்ளனர்.

You may also like

© RajTamil Network – 2024